முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித்தின் ஏகே 62... விலகிய விக்னேஷ் சிவன்... கமிட்டான மகிழ் திருமேனி?

அஜித்தின் ஏகே 62... விலகிய விக்னேஷ் சிவன்... கமிட்டான மகிழ் திருமேனி?

விக்னேஷ் சிவன், அஜித், மகிழ் திருமேனி

விக்னேஷ் சிவன், அஜித், மகிழ் திருமேனி

தயாரிப்பு தரப்புக்கு ஏகே 62 படத்தின் கதை பிடிக்காததால் விக்னேஷ் சிவன் விலகியதாகவும் வேறு ஒரு இயக்குநர் அந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித்குமார் துணிவு படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியில் வெற்றிப் படமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாகவும் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருந்தார்.

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாகவும், அரவிந்த்சாமி, சந்தானம் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் நாளுக்கு நாள் வெவ்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. கீரிடம், பில்லா படங்களுக்கு பிறகு அஜித் - சந்தானம் காம்போ இணையவிருப்பதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாய் இருந்து வந்தன.

இந்த நிலையில் தயாரிப்பு தரப்புக்கு இந்தப் படத்தின் கதை பிடிக்காததால் விக்னேஷ் சிவன் விலகியதாகவும் வேறு ஒரு இயக்குநர் அந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் தடம், தடையறத் தாக்க, மீகாமன், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி கலகத் தலைவன் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

மேலும் கடந்த 2019-ம் ஆண்டு விஜய் நடிக்கவுள்ள படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்று செய்திகள் வெளியாகின. விஜய் - மகிழ் திருமேனி இருவருடைய சந்திப்பு நடந்துள்ளது. அப்போது மகிழ் திருமேனி கூறிய கதைக்கு விஜய் ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் தொடரவில்லை. இந்நிலையில் விஜய்க்கு மகிழ் திருமேனி கூறிய மாஸ் கதை கூட ஏகே 62 படமாக இருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

Also read... கெத்தா... மாஸா... இணையத்தில் வைரலாகும் ‘விஜய் 67’ படத்திற்கான அர்ஜுன் லுக்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Director vignesh shivan