• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வெஸ்ட் சைட் ஸ்டோரி ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வெஸ்ட் சைட் ஸ்டோரி ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

வெஸ்ட் சைட் ஸ்டோரி

வெஸ்ட் சைட் ஸ்டோரி

இரண்டு வருடங்கள் முன்பே படப்பிடிப்பு நிறைவடைந்த படத்தை டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் புதிய படமான வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்தின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

உலகளாவிய வணிக சினிமாவில் இரண்டு பெயர்கள் பிரபலம். ஸ்டீவன் ஸ்பீர்பெர்க், ஜேமஸ் கேமரூன். 1993 இல் ஜுராஸிக்பார்க் வெளியான போது ஸ்பீல்பெர்க்கின் பெயர் உலகளவில் எதிரொலித்தது. அப்போது ஜேம்ஸ் கேமரூனை யாருக்கும் தெரியாது. 1997 இல் டைட்டானிக் வெளிவந்த போது அந்த பெயரை தெரியாதவர் யாருமில்லை. அவதார் ஜேம்ஸ் கேமரூனை உயரத்தில் வைத்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்பீல் பெர்க்கின் தனித்துவம், கேம்ஸ் கேமரூனைப் போல உச்சபட்ச வணிக சாத்தியமுள்ள படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் சின்னச்சின்ன ஐடியாக்களை திரைப்படமாக்குவது. அப்படி அவர் இயக்கியிருக்கும் புதிய படம் வெஸ்ட் சைட் ஸ்டோரி

நியூயார்க்கின் பிராட்வே தியேட்டர்ஸுக்காக ஆர்தர் லாரன்ட்ஸ் 1957 இல் எழுதிய இசை  நாடகம் வெஸ்ட் சைட் ஸ்டோரி. 700 முறைக்கு மேல் அரங்கேறிய இந்த நாடகத்தை ஷேக்ஸ்பியரின் ரோமியோ அண்ட் ஜுலியட் பாதிப்பில் எழுதியிருந்தார். 1961 இல் இதேபெயரில் படமாக்கப்பட்டது.

Also read... தொடங்கியது த்ரிஷ்யம் கூட்டணியின் புதிய படம்...!

ஆர்தரின் புத்தகத்தை அதிகம் தழுவி வெஸ்ட் சைட் ஸ்டோரியை ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ளார். 2014 இல் டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டது. டோனி குஷ்னர் இதன் திரைக்கதையை எழுதி முடிக்க 2017 ஆனது. அடுத்த வருடம் நடிகர்களை தேர்வு செய்தனர். 2019 ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கினர். இரண்டே மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது

இரண்டு வருடங்கள் முன்பே படப்பிடிப்பு நிறைவடைந்த படத்தை டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்தியாவில் டிஸ்னி இந்தியா படத்தை விநியோகிக்கிறது. அதே டிசம்பர் 10 இந்தியாவிலும் படம் திரைக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: