• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நயன்தாரா படத்துக்கு இத்தனை கோடிகளா? - ஆச்சரியத்தில் திரையுலகம்!

நயன்தாரா படத்துக்கு இத்தனை கோடிகளா? - ஆச்சரியத்தில் திரையுலகம்!

நெற்றிக்கண்

நெற்றிக்கண்

திரையரங்குகள் எப்படி பிரபல நட்சத்திரங்களுக்கு முன்னுரிமை தருமே அதேபோல்தான் ஓடிடியிலும் முதல் மரியாதை அவர்களுக்கே.

  • News18
  • Last Updated :
  • Share this:
நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் ஆகஸ்ட் 13 நேரடியாக வெளியாகிறது. இந்தப் படத்துக்கு டிஸ்னி நிறுவனம் அளித்திருக்கும் பெரும் தொகை திரையுலகினரை ஆச்சரியத்தில் அழ்த்தியுள்ளது.

தென்கொரிய படமான பிளைன்டை தழுவி வெற்றிக்கண் எடுக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. மிலந்த் ராவ் இயக்கம். திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால், நெற்றிக்கண் தயாரான போதே ஓடிடியில் வெளியிடுவது என்று முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழில் தயாரான சுமார் 150 திரைப்படங்கள் ஓடிடி வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இதில் 60 சதவீத படங்களை எந்த ஓடிடியும் சீண்டவில்லை. மீதமுள்ள 40 சதவீதத்தில் 35 சதவீத படங்களை, எங்க ஓடிடி தளத்தில் வெளியிடறோம், படத்தை எத்தனை பேர் பார்க்கிறோர்களோ, அதை வைத்து காசு வாங்கிக் கொள்ளுங்கள் என டீல் பேசுகிறோர்கள். இந்த டீலில் உள்ள ஆபத்தான அம்சம், படத்தை பார்க்க வைக்க நீங்கள்தான் விளம்பரம் செய்ய வேண்டும்.

Also read... தடம் ரீமேக்கில் நடிப்பது இரட்டை சவால் - ஆதித்ய ராய் கபூர்!

அதர்வா போன்ற நடிகர்களின் படங்களே இந்த 35 சதவீதத்தில்தான் உள்ளன. அழுத்தி கேட்டால், செலவு செய்ததில் கால்வாசி தொகைக்கு படத்தை தர முடியுமா என கேட்கிறார்கள். மீதி 5 சதவீதம் பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகளின் படங்கள். இவர்களின் படங்களுக்கு ஓடிடி தளங்கள் அள்ளிக் கொடுக்கின்றன. நயன்தாராவின் வெற்றிக்கண் படத்துக்கு சுமார் 15 கோடிகள் டிஸ்னி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட திரையுலகம் வியப்பில் உள்ளது. படபட திரையரங்கில் வெளியானால்கூட இந்த தொகையை பார்ப்பது அரிது

திரையரங்குகள் எப்படி பிரபல நட்சத்திரங்களுக்கு முன்னுரிமை தருமே அதேபோல்தான் ஓடிடியிலும் முதல் மரியாதை அவர்களுக்கே. ஓடிடியை நம்பி சின்ன பட்ஜெட் படம் எடுப்பவர்கள் மார்க்கெட் நிலவரம் புரிந்து பணத்தை முதலீடு செய்வது அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: