HOME - இப்படியும் படம் எடுக்கலாம்...!

ஹோம்

ஹோம் படத்தை இயக்கியவர் ரோஜின் தாமஸ். இதற்குமுன் பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென், ஜோ அண்ட் தி பாய் படங்களை இயக்கியவர். ஹோம் மூன்றாவது படம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமேசான் பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹோம் திரைப்படம் வெளியானது. முன்னணி நாயகர்கள் படத்தில் இல்லை. ஆனால், மலையாளத்தின் முக்கிய நடிகர்கள் உண்டு. மலையாள சினிமாவின் நகைச்சுவை நடிகர் இந்திரன்ஸ் இதில் பிரதான வேடம் ஏற்றிருந்தார். 

இந்திரன்ஸ், மஞ்சு பிள்ளை வயதான தம்பதிகள். அவர்களுக்கு டீன் ஏஜ் பருவத்தில் இரண்டு மகன்கள். மூத்தவன் இயக்குனர். முதல் படத்தின் வெற்றிக்குப் பின் இரண்டாவது படத்துக்கான ஸ்கிரிப்ட் சரியாக அமையாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவல் தொழில்நுட்பத்துறை 2005 இக்குப் பிறகு நமது சமூகத்தை அடியோடு மாற்றியது எனலாம். அப்பா ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து அறுபதாவது வயதில் முப்பதாயிரம் சம்பளத்தில் ரிட்டையர்ட் ஆகையில், அவரது டீன்ஏஜ் வயது பிள்ளைகள் முதல் மாதமே ஐம்பதாயிரம், அறுபதாயிரம் சம்பளமாக வாங்கும். அந்த தலைமுறை தனது முதிய தலைமுறையை எப்படி மதிக்கும்

இதுவல்ல கதை. இதையொட்டிய இளைய தலைமுறை, தனது  முந்தைய தலைமுறையிடம் காண்பிக்கும் அலட்சியம்லட்சியவாதத்தை இழந்து சந்தாப்பவாதிகளாக மாறியிருக்கும் அவலம் ஆகியவற்றை நுட்பமாகவும், அதேநேரம் எளிமையாகவும் சொல்கிறது ஹோம். படத்தின் கதையில், காட்சி அமைப்பில், நடிப்பில் என்று எங்குமே ஆர்ப்பாட்டமில்லை. பேரனுபவம் வாய்ந்த ஒருவராலே இத்தனை அடக்கத்துடன் ஒரு படைப்பை தர முடியும்

இந்திரன்ஸ் தனது இயல்பான நடிப்பில் அசத்தியிருக்கிறார். துடுக்கான நகைச்சுவை வேடத்தில் பார்த்த அவரை இப்படியொரு வேடத்தில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மோகன்லால் படத்தைப் பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.

Also read... மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக மீண்டும் கருத்து தெரிவித்த நவீன்!

சமீபத்தில் வெளியான குருதி படத்தில் மலையாளத்தின் மற்றுமொரு முக்கிய நகைச்சுவை நடிகர் மம்முக்கோயா தனது குணச்சித்திர நடிப்பில் மிரட்டினார் என்றால், இப்போது இந்திரன்ஸ். அவரது மனைவியாக நடித்திருக்கும். மஞ்சு பிள்ளையும் நகைச்சுவை வேடங்களுக்காக அறியப்படுகிறவர். இளம் நடிகர் ஸ்ரீநாத் பாசி வழக்கம்போல் யதார்த்த நடிப்பில் தனது கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருந்தார்.

ஹோம் படத்தை இயக்கியவர் ரோஜின் தாமஸ். இதற்குமுன் பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென், ஜோ அண்ட் தி பாய் படங்களை இயக்கியவர். ஹோம் மூன்றாவது படம். ரோஜின் தாமஸுக்கு இப்போது வயது 28. 
Published by:Vinothini Aandisamy
First published: