தமிழ் சினிமாவில் சோழர்களின் வரலாறு என்றுமே பேசு பொருளாக இருந்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்பட்ட சோழர்களின் வரலாற்று கதைகள் ஒரு தொகுப்பு.
தமிழகத்தின் தஞ்சை உள்ளிட்ட இன்றைய டெல்டா மாவட்டங்களை ஆண்ட சோழர்களின் நீண்ட நெடிய வரலாறு தமிழர்களின் பெருமைகளில் ஒன்றாக நிலைத்து நிற்கிறது. சோழர்கள் எழுப்பிய தஞ்சை பெரிய கோயில் பல வரலாற்று உலக அதிசயங்களுக்கு நிகராக தற்பொழுதும் ஆச்சரியங்களுடன் நிமிர்ந்து நிற்கிறது.
ஆலயம் முழுக்க நாட்டில் வாழ்ந்த குடிமக்களின் பெயர்களையும் கொடையாளர்களின் பெயர்களையும் தாங்கி 80 டன் கோபுரத்துடன் வீற்று இருக்கும் இந்த பிரம்மாண்டத்தை கட்டியமைத்த ராஜ ராஜனின் பெயரை இன்றும் தமிழகம் உச்சரித்துக் கொண்டே இருக்கிறது, இதற்கு தமிழ் சினிமாவும் விதிவிலக்கல்ல.
சோழர்களின் வரலாற்றை புனைவு கதையாக பதிவு செய்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் விரைவில் திரைப்படமாக வெளிவர உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி விக்ரம், ஜெயம் ரவி ஐஸ்வர்யா ராய் திரிஷா என மாபெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
சோழர்களின் வாழ்க்கை முறையை நாடக வடிவில் பத்திரப்படுத்தி வைப்பது என்பது அவர்களின் ஆட்சி காலத்திலேயே தொடங்கிவிட்டது. சோழர்களின் வாழ்க்கை முறை போர் தந்திரங்கள் கலை இலக்கியம் கலப்பு திருமணம் உள்ளிட்ட வாழ்க்கை முறைகளை ராஜராஜேஸ்வரம் என்ற பெயரில் நாடகமாக இயற்றி தஞ்சையில் சோழர்களின் ஆட்சி காலத்தின் போது மக்களுக்கு காட்சி படித்திவந்தனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழில் நாடகங்கள் பலவும் சோழர்களின் வாழ்க்கை முறையை மையப்படுத்தி இயற்றப்பட்டது. ராஜ ராஜ சோழனின் கதைகளும் அவரது மகன் ராஜேந்திர சோழனின் கதைகளும் இன்றளவும் மக்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது.
இதை மையமாக வைத்து ராஜராஜ சோழன் என்ற திரைப்படத்தை சிவாஜி கணேசன் நடிப்பில் தமிழ் சினிமா உருவாக்கியது. இந்தத் திரைப்படத்தில் ஒட்டுமொத்த ராஜ ராஜ சோழனின் வாழ்க்கை சம்பவங்களையும் பட குழுவினர் படமாக்கி இருந்தனர். ராஜேந்திர சோழனாக நடிகர் சிவகுமார் நடித்திருந்தார்.
இதே போல சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே நடைபெற்ற போர்கள் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான பாண்டியர்களை வென்று சோழர்கள் கப்பம் கட்ட வைத்திருந்த நிலையில் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் தலைமையில் சோழர்கள் வீழ்த்தப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிகழ்வுகளை மையமாக வைத்து தற்பொழுதும் சோழர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்ற குறிப்புகளோடு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார்.
வெளியான போது இந்த திரைப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் அதன் பின்னர் ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் என்ற தலைப்பு சோழர்களை குறிக்கும் தலைப்பாக வைக்கப்பட்டது. மலேசியா இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளை வென்றிருந்த சோழனின் பெருமைகளை சொல்லும் பட்டமாக கடாரம் கொண்டான் பார்க்கப்பட்டது.
Also read... The Legend Movie Review: லெஜெண்ட் படம் எப்படி இருக்கிறது?
அண்மையில் இயக்குனர் ரஞ்சித் சோழர்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தது தமிழ் சினிமாவில் மற்றொரு சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இப்படி தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு வடிவில் சோழர்களின் பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்கும் அளவு தமிழில் பேசு பொருளாக உள்ள சோழர்களின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்றான பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமாக படமாகி வெளிவர உள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படம் வெளிவரும் பட்சத்தில் மேலும் சோழர்களின் வரலாறு பேசு பொருளாகும் என்பதிலும் தொடர்ந்து சோழர்களின் வரலாற்று கதைகள் திரைப்படங்களாகும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.