சாதனை விலைக்கு விற்கப்பட்ட விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமை!

விக்ரம் ஃபர்ஸ்ட் லுக்

கமலின் எந்தப் படமும் இதுவரை இத்தனை பெரிய தொகைக்கு விலைபோனதில்லை. படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் நடிப்பதால், அவர்களுக்கு இருக்கும் மார்க்கெட்டையும் கணக்கில் வைத்து இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிக்கும் விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. கோல்ட்மைன்ஸ் ஃபிலிம்ஸ் இந்த உரிமையை வாங்கியுள்ளது.

தென்னிந்திய படங்களின் இந்தி டப்பிங் உரிமை சமீபகாலமாக அதிக தொகைக்கு வாங்கப்படுகிறது. இந்தி தொலைக்காட்சிகளில் தென்னிந்திய படங்கள் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. அத்துடன் யூடியூபிலும் இந்த டப்பிங்குகள் பதிவேற்றப்படுகின்றன. அதில் கோல்ட்மைன்ஸ் ஃபிலிம்ஸ் முன்னணியில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்கள்தான் வெற்றிமாறனின் அசுரன் படத்தின் இந்தி டப்பிங்கை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். 4 கோடிக்கும் அதிகமானவர்கள் அப்படத்தை பார்த்துள்ளனர். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் இந்தி டப்பிங் உரிமையையும் கோல்ட்மைன்ஸ் வாங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து விக்ரம் படத்தின் உரிமையையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.

Also read... Abi Tailor: திருமணம் எப்போது? மதன் - ரேஷ்மா பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய தகவல்!

விக்ரமின் இந்தி டப்பிங் உரிமையை கோல்ட்மைன்ஸ் 35 கோடிகளுக்கு வாங்கியுள்ளது. இதுவொரு சாதனை தொகை. கமலின் எந்தப் படமும் இதுவரை இத்தனை பெரிய தொகைக்கு விலைபோனதில்லை. படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் நடிப்பதால், அவர்களுக்கு இருக்கும் மார்க்கெட்டையும் கணக்கில் வைத்து இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: