Home /News /entertainment /

ஜப்பானில் வெளியாகும் தி கிரேட் இன்டியன் கிச்சன்...!

ஜப்பானில் வெளியாகும் தி கிரேட் இன்டியன் கிச்சன்...!

தி கிரேட் இன்டியன் கிச்சன்

தி கிரேட் இன்டியன் கிச்சன்

2021 ஜனவரி 15 ஆம் தேதி தி கிரேட் இன்டியன் கிச்சன் வெளியானது. நிமிஷா சஜயன், சுராஜ் வென்ஞாரமூடு நடித்திருந்த இந்தப் படம் உடனடியாக பெரும் வரவேற்பை பெற்றது.

  • News18
  • Last Updated :
சென்ற வருடம் வெளியான மலையாளப் படம் தி கிரேட் இன்டியன் கிச்சன் இந்த மாதம் 21 ஆம் தேதி ஜப்பானில் ஜப்பான் மொழி சப்டைட்டிலுடன் திரையிடப்படுகிறது.

2021 ஜனவரி 15 ஆம் தேதி தி கிரேட் இன்டியன் கிச்சன் வெளியானது. நிமிஷா சஜயன், சுராஜ் வென்ஞாரமூடு நடித்திருந்த இந்தப் படம் உடனடியாக பெரும் வரவேற்பை பெற்றது. இந்திய பெண்களில் கணிசிமான சதவீதத்தினரின் வாழ்க்கை அடுப்படியில் கணவனுக்கும், அவனது குடும்பத்துக்கும் சமையல் செய்வதிலேயே கழிவதை கலாபூர்வமாக படம் சொன்னது.

நிமிஷா விஜயன், சுராஜ் இருவரது நடிப்பும் முதல்தரமாக அமைந்திருந்தன. அதேபோல் படத்தின் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் கதைக்கு நியாயம் செய்யும்விதமாக அமைந்து தி கிரேட் இன்டியன் கிச்சனை முக்கியமான படமாக்கியது. படத்தை ஜோ பேபி எழுதி இயக்கியிருந்தார். இது அவரது நான்காவது படமாகும். இந்தப் படத்தை தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்கின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, ஆர்.கண்ணன் படத்தை இயக்கி வருகிறார்.



Also read... தனுஷின் வாத்தி படத்திலிருந்து வெளியேறிய நாயகி...?

Also read... பொங்கல் வெளியீட்டிலிருந்து கடைசி பெரிய படமும் பின்வாங்கியது...!

படம் வெளிவந்து ஒரு வருடம் கழிந்த நிலையில் ஜனவரி 21 ஆம் தேதி ஜப்பானில் இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். இந்தியப் படங்கள் அரிதாகவே ஜப்பானில் வெளியாகும் அந்த வாய்ப்பு தி கிரேட் இன்டியன் கிச்சன் படத்துக்கு கிடைத்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி