Home /News /entertainment /

The Gray Man பிரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா வருகிறார்கள் ரூசோ பிரதர்ஸ்

The Gray Man பிரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா வருகிறார்கள் ரூசோ பிரதர்ஸ்

தி கிரே மேன்

தி கிரே மேன்

தி கிரே மேன் திரைப்படம் ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும் என தனுஷ் கூறியுள்ளார். இந்த திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்ச்சிக்காக Russo Brothers இந்தியா வருகின்றனர். 

  • News18
  • Last Updated :
மும்பையில் நடைபெறும் The Gray Man திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல ஹாலிவுட் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இந்தியா சுற்றுப்பயணம் வருகின்றனர். 

ஹாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் தற்போது தி கிரே மேன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளனர். அந்த திரைப்படத்தில் தமிழ் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் வரும் 22ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இந்த நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஒரு கட்டமாக இந்தியாவின் மும்பை நகரில் நடைபெறும் தி கிரே மேன் பிரீமியர் நிகழ்ச்சியில் ரசிகர்களை சந்திக்க அப்படத்தின் இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் இந்தியா வருகின்றனர்.

அந்த நிகழ்ச்சியில் தனுசுடன் அவர்கள் இருவரும் கலந்து கொண்டு ரசிகர்களை சந்திக்கின்றனர்.  இதற்கான ஒரு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

அதில் எங்கள் நண்பர் தனுசை சந்திக்க இந்தியா வருகிறோம்.  இந்தியா வருவதில் எங்களுக்கு மகிழ்ச்சி,  விரைவில் சந்திப்போம் என தெரிவித்திருக்கின்றனர். அதேபோல் தி கிரே மேன் திரைப்படம் ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும் என்று நடிகர் தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

Also read... உலகளவில் No.1 இடத்தை பிடித்த பீஸ்ட் பட பாடல்!

அத்துடன் ஆக்சன், டிராமா, வேகம், சேசிங் என அனைத்தும் இந்த திரைப்படத்தில் இருக்கின்றது. அற்புதமான நபர்கள் இணைந்த இந்த திரைப்படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என தனுஷ் தெரிவித்திருக்கிறார். தனுஷ் முதன் முதலாக ஹாலிவுட் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி