தனுஷின் தி க்ரே மேன் படத்திற்கு ஸ்பெஷல் எமோஜி அளித்த ட்விட்டர் சிறப்பு செய்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரமாண்ட தயாரிப்பாக ‘தி க்ரே மேன்’ என்கிற திரைப்படம் உருவாகிறது. ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜெகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
ஜெகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்பராஜ், மாறன் படத்தை கார்த்திக் நரேன் ஆகியோர் இயக்கியதால் இந்த படங்கள் மெகா ஹிட்டடித்து, தனுஷை அடுத்த லெவலுக்கு கொண்டு சேர்க்கும் என ரசிகர்கள் நம்பினர். எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
Also read... பிரித்விராஜின் ‘ஜன கன மன’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்நிலையில் தமிழில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார்.
தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி திரைப்படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷின் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்த படம் ஜூலை மாதம் 15-ம்தேதி நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தி க்ரே மேன் படத்தினை சிறப்பிக்கும் விதமாக படத்தின் அதிகாரப்பூர்வ ஸ்பெஷல் ட்விட்டர் எமோஜியை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.