Home /News /entertainment /

மும்பையில் நடந்த The Gray Man நிகழ்ச்சி.. வேஷ்டி சட்டையுடன் மாஸாக என்ட்ரி கொடுத்த தனுஷ்!

மும்பையில் நடந்த The Gray Man நிகழ்ச்சி.. வேஷ்டி சட்டையுடன் மாஸாக என்ட்ரி கொடுத்த தனுஷ்!

தனுஷ்

தனுஷ்

தி கிரேம் மேன் இந்திய பிரீமியர் நிகழ்ச்சியில் வேஷ்டி சட்டையுடன் கலந்து கொண்டு அசத்திய நடிகர் தனுஷ். 

The Gray Man படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் வேஷ்டி சட்டை அணிந்து தமிழக பாரம்பரியத்துடன் கலந்து கொண்டார். 

தமிழ் திரைப்பட நடிகர் தனுஷ் ஹாலிவுட் இயக்குனர்களான Russo Brothers இயக்கியுள்ள தி கிரே மேன் என்ற ஆங்கில திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் 22 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.  இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. அதில் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக தனுஷ் அங்கு சென்று திரும்பி இருந்தார். இந்த நிலையில் நேற்று தி கிரே மேன் திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.



அதில் தி கிரேம் மேம் படத்தின் இயக்குனர்கள் Russo Brothers மற்றும் இந்திய நடிகர் தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அதில் நடிகர் தனுஷ் வேஷ்டி சட்டையுடன் தமிழக பாரம்பரிய முறையில் கலந்து கொண்டார். இதற்கு தனுஷ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவர் சென்னையில் நடைபெறும் பல விழாக்களில் வேஷ்டி சட்டையுடன் பங்கேற்றுள்ளார். ஆனால் ஹாலிவுட்டில் தான் நடித்திருக்கும் பிரீமியர் நிகழ்ச்சியிலும் அவ்வாறு பங்கேற்றதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த படத்தை தடுத்து தனுஷின் திருச்சிற்றம்பலம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor dhanush, Hollywood, Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி