ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டர் போஸ்டர் வெளியீடு…

தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டர் போஸ்டர் வெளியீடு…

தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷ்

தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷ்

முழு நீள ஆக்சன் த்ரில்லாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில் முக்கிய கேரக்டர்களில் ரியான் கோஸ்ங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ் உள்ளிட்டோருடன் தனுஷும் நடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் பகிர்ந்து வருகின்றனர்.

தி கிரே மேன் கேரக்டர் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. ஹாலிவுட்டில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் தி கிரே மேன் என்ற படம் உருவாகியுள்ளது. இதனை ரூசோ பிரதர்ஸே தயாரித்துள்ளார்கள்.

முழு நீள ஆக்சன் த்ரில்லாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில் முக்கிய கேரக்டர்களில் ரியான் கோஸ்ங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ் உள்ளிட்டோருடன் தனுஷும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க - திரையில் நெஞ்சுக்கு நீதியை பேசிய தமிழ் படங்கள்!

2009-ல் வெளிவந்த தி கிரே மேன் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 22-ம்தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாக ஜூலை 15-ம்தேதி குறிப்பிட்ட சில திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்படும் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் தமிழ்நாட்டில் தி கிரே மேன் திரையரங்குகளில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க - பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸிற்கு ‘மாலத்தீவை’ அவ்ளோ பிடிச்சிருச்சாம்!

தி கிரே மேன் படத்தில் தனுஷ் இடம்பெற்ற நாளில் இருந்து அவரது ரசிகர்கள் படம் எப்போது வரும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். சமீபத்தில் வெளிவந்த தனுஷின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தி கிரே மேன் படத்தில் தனுஷின் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் Leathal Force என்று டேக்லைன் வைத்துள்ளார்கள். இந்த படத்தில் சர்வதேச கூலிப்படையினர் கேரக்டர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், மிக ஆபத்தான கொலைகாரராக தனுஷ் இடம்பெறலாம் என்று யூகிக்கப்படுகிறது.

First published:

Tags: Actor dhanush