சூர்யா பிறந்தநாள் பரிசாக வரும் காப்பான் பாடல்கள்!

முன்னதாக ‘சிரிக்கி’ என்ற பாடல் ஜுலை 5-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

news18
Updated: July 17, 2019, 12:25 PM IST
சூர்யா பிறந்தநாள் பரிசாக வரும் காப்பான் பாடல்கள்!
காப்பான்
news18
Updated: July 17, 2019, 12:25 PM IST
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா, இயக்குநர் கே.வி.ஆனந்த் 3-வது முறையாக காப்பான் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜூன் மாதம் 14-ம் தேதி படத்தின் டீசரும் ‘சிரிக்கி’ என்ற பாடல் ஜுலை 5-ம் தேதியும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


இந்நிலையில், படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாள் வரும் ஜூலை 23-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அவர் பிறந்தநாளுக்கு பரிகாக அளிக்க காப்பான் படத்தின் ஆடியோ ஜூலை 21-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.



Also watch

First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...