ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அதர்வா நடித்துள்ள பட்டத்து அரசன் படத்தின் முதல் பாடல் வெளியீடு

அதர்வா நடித்துள்ள பட்டத்து அரசன் படத்தின் முதல் பாடல் வெளியீடு

பட்டத்து அரசன்

பட்டத்து அரசன்

அதர்வா நடித்துள்ள பட்டத்து அரசன் படத்தின் முதல் பாடல் வெளியானது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அதர்வா நடித்திருக்கும் பட்டத்து அரசன் படத்தின் முதல் பாடலை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    களவாணி, வாகை சூடவா உள்ளிட்ட படங்களை இயக்கிய சற்குணம், தற்போது பட்டத்து அரசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதர்வா நடித்துள்ள அந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமையை தட்டித் தூக்கிய பெரிய நிறுவனம்

    இந்த நிலையில் ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் யாரோ யாரோ இவ என்ற பாடலை சிங்கிள் ட்ராக் முறையில் வெளியிட்டுள்ளனர்.  சற்குணம் - ஜிப்ரான் கூட்டணியில் வாகை சூடவா திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. அந்த வகையில் இந்த பட்டத்து அரசன் படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவரும் என நம்புகின்றனர்.

    'நல்லா இருமா'வுக்கு நல்ல ரீச்.. விஜய் சேதுபதியின் 'DSP' படத்தின் முதல் சிங்கள்!

    பட்டத்து அரசன் திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகிறது. இதில் அதர்வாவுடன் ராஜ்கிரண், ராதிகா ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    |

    படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது.

    Published by:Srilekha A
    First published:

    Tags: Actor Atharvaa