ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வெளியாகிறது பாடல்.. வாரிசு பாடத்தின் சூப்பர் அப்டேட்!

விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வெளியாகிறது பாடல்.. வாரிசு பாடத்தின் சூப்பர் அப்டேட்!

வாரிசு

வாரிசு

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம்அறிவித்துள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் உலா வருகின்றது.

  இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

  இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

  சமீபத்தில் படத்தின் வியாபார பணிகளை தயாரிப்பாளர் தில் ராஜு தொடங்கினார்.  அதில் முதல் கட்டமாக தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் உள்ளிட்டவற்றை முடித்தார்.

  Also read... பிக் பாஸ்க்குள் மீண்டும் செல்லும் ஜி பி முத்து?! சித்ரங் புயலாக சீறும் தகவல்!

  இந்நிலையில் வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம்அறிவித்துள்ளது. தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்ததுடன் பொங்கலுக்கு வாரிசு படம் ரிலீஸ் ஆகின்றது என்றும் நேற்று அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னதாக இந்த தீபாவளிக்கு ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று படத்தின் இசையமைப்பாளர் தமன் தெரிவித்திருந்த நிலையில் நேற்று ரிலீஸ் அப்டேட் மட்டுமே வெளியானது.

  இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actor Vijay