ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் முதல் சிங்கிள் குறித்து அப்டேட் கேட்ட ரசிகர்... சர்பிரைஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் முதல் சிங்கிள் குறித்து அப்டேட் கேட்ட ரசிகர்... சர்பிரைஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வாத்தி

வாத்தி

Dhanush Vaathi Update | தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் முதல் சிங்கில் விரைவில் வெளியாகுகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் பாடல் குறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் அப்டேட் கேட்ட நிலையில், அவருக்கு ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.

  நடிகர் தனுஷ், வெங்கி அட்லூரி என்பவர் இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் சித்தாரா எண்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது. இதற்கான படப்பிடிப்பு ஐத்தராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. வாத்தி திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது.

  தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் விரைவில் வெளியாகிறது.  படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது. அதில் முதல் கட்டமாக,  தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல விநியோகஸ்தரும், பைனான்சியருமான அன்புச் செழியன் கைப்பற்றியிருக்கிறார்.

  ஏற்கனவே இவர் சிவகார்த்திகேயன் நடித்தவரும் பிரின்ஸ் என்ற திரைப்படத்தின் உரிமையையும் வாங்கியிருந்தார். இந்த நிலையில் மற்றொரு தெலுங்கு தயாரிப்பாளரிமிருந்து வாத்தி திரைப்படத்தை கைப்பற்றியுள்ளார்.

  வாத்தி திரைப்படத்தை டிசம்பர் மாதம் 9-ம் தேதி வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருந்தனர் . ஆனால் இப்பொழுது வாத்தி திரைப்படம் வெளியாகுவது தள்ளிவைத்து அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட பட குழுவினர் திட்டமீட்டு இருக்கிறார்கள் .

  இந்த திரைப்படத்தில் சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  இந்நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரிடம் ட்விட்டரில் ஒருவர் "எவளோ பேருக்கு உதவி பண்றீங்க எங்களுக்கு வாத்தி படத்தின் முதல் பாடல் எப்போ ரிலீஸ் ஆகும் என்று அப்டேட் செய்ங்க ஜிவி அண்ணா" என்று ட்வீட் செய்து இருக்கிறார்.

  அதற்கு பதிலாக விரைவில் வெளியாகும். தயாரிப்பாளர்களின் ஒப்புதல்காக காத்திருக்கிறோம் என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actor dhanush, Gv praksh kumar