• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • RC15  முதல்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த ஷங்கர்!

RC15  முதல்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த ஷங்கர்!

ராம் சரண், ஷங்கர் உடன் படக்குழுவினர்

ராம் சரண், ஷங்கர் உடன் படக்குழுவினர்

ஷங்கரின் இந்தத் தெலுங்குப் படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தில் ராஜு 170 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஷங்கர் தனது முதல் நேரடித் தெலுங்குப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

2.0 படத்துக்குப் பின் இந்தியன் 2 படத்தை கமலை வைத்து ஆரம்பித்தார் ஷங்கர். ஆரம்பம் முதலே பட்ஜெட் விவகாரத்தில் ஷங்கருக்கும், தயாரிப்பு தரப்புக்கும் இடையில் உரசல் இருந்து வந்தது. படப்பிடிப்பில் நடந்த கோர விபத்தில் மூன்று பேர் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடங்கிய போது மீண்டும் பட்ஜெட் பிரச்சனை.

ஷங்கர் இந்தியன் 2 படத்திலிருந்து வெளியேறி தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்குவதாகவும், அதையடுத்து இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியனை ரீமேக் செய்வதாகவும் அறிவித்தார். இதனை எதிர்த்து லைகா நீதிமன்றம் சென்றது. இறுதித்தீர்ப்பில் ஷங்கர் பிற படங்கள் இயக்க தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வந்தது. ஷங்கர் பிரமாண்டமாக பூஜை நடத்தி, சென்ற மாதம் ராம் சரண் படத்தை தொடங்கினார்.

ஆர்சி15 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு புனேயில் தொடங்கியது. ராம் சரண், படத்தின் நாயகி கியாரா அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலில் ஒரு சண்டைக் காட்சியை சண்டை இயக்குனர்கள் அன்பறிவை வைத்து எடுத்தார் ஷங்கர். அடுத்து ஒரு பாடல் காட்சி. ராம் சரண், கியாரா அத்வானி இடம்பெற்றது. தமன் பாடலுக்கு இசையமைத்திருந்தார். சண்டைக் காட்சியும், பாடல் காட்சியும் வெற்றிகரமாக எடுக்கப்பட்ட நிலையில், முதல்கட்டப் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

Also read... Annaatthe Movie Review: அண்ணாத்த - சிவா செஞ்சிட்டாரா.. வென்றுவிட்டாரா?

ஷங்கரின் இந்தத் தெலுங்குப் படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தில் ராஜு 170 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். அஞ்சலி, ரகுமான், ஜெயராம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: