Home /News /entertainment /

குங்குமப் பொட்டின் மங்கலம் பாடலை எழுதிய தமிழ் சினிமாவின் முதல் முஸ்லீம் பெண் பாடலாசிரியர்!

குங்குமப் பொட்டின் மங்கலம் பாடலை எழுதிய தமிழ் சினிமாவின் முதல் முஸ்லீம் பெண் பாடலாசிரியர்!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா

இவ்வளவு சிறந்த பாடலை எழுதிய ரோஷனரா பேகம் முஸ்லீம் பெண்களுக்கு அந்தக் காலத்தில் இருந்த கட்டுப்பாடுகள் காரணமாக தொடர்ந்து எழுதவில்லை. ஒரேயொரு பாடலுடன் திரைப்பயணத்தை முடித்துக் கொண்டார்.

  • News18
  • Last Updated :
எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த குடியிருந்த கோயில் திரைப்படம் 1968 மார்ச் 15 ஆம் தேதி வெளியானது. கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் இடம்பெற்ற குங்குமப் பொட்டின் மங்கலம் பாடல் இன்றும் பலருடைய விருப்பப் பாடலாக உள்ளது.

இந்தப் பாடலை எழுதியவர் கோவையைச் சேர்ந்த முஸ்லிமான ரோஷனரா பேகம் என்பவர். 1968 இல் ஒரு முஸ்லீம் இளம்பெண் திரைப்படத்திற்குப் பாடல் எழுதினார் என்பது ஆச்சரியமான செய்தி. டி.எம்.எஸ். இசையில் அவர் எழுதியப் பாடல், பாடல் பதிவின் போதே பலராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. அத்தனை நுணுக்கமாக வார்த்தைகளை கோர்த்திருந்தார் ரோஷனரா பேகம்.குங்குமப் பொட்டின் மங்கலம்

நெஞ்சம் இரண்டின் சங்கமம்

நெஞ்சம் இரண்டின் சங்கமம்

இன்றெனக் கூடும்

இளமை ஒன்றெனப் பாடும்

 

குங்குமப் பொட்டின் மங்கலம்

நெஞ்சம் இரண்டின் சங்கமம்

நெஞ்சம் இரண்டின் சங்கமம்

இன்றெனக் கூடும்

இளமை ஒன்றெனப் பாடும்

 

எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்

உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்

தித்திக்கும் இதழ் மீது மோகம்

தந்ததே மாந்தளிர் தேகம்

தந்ததே

மாந்தளிர் தேகம் தேகம் தேகம்

 

மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம்

தினம் சந்திக்க சந்திக்க இன்பம்

பெண்ணான பின் என்னைத் தேடி

கொண்டதே எண்ணங்கள் கோடி

கொண்டதே

எண்ணங்கள் கோடி கோடி கோடிகுங்குமப் பொட்டின் மங்கலம்

நெஞ்சம் இரண்டின் சங்கமம்

நெஞ்சம் இரண்டின் சங்கமம்

இன்றெனக் கூடும்

இளமை ஒன்றெனப் பாடும்

 

தங்கம் மங்கும் நிறமான மங்கை

அங்கம் எங்கும் ஆனந்த கங்கை

ஜில்லென்னும் குளிர் காற்று வீசும்

மௌனமே தான் அங்கு பேசும்

மௌனமே

தான் அங்கு பேசும் பேசும் பேசும்

 

மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உன்ளம்

விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்

கற்பனைக் கடலான போது

சென்றதே பூந்தென்றல் தூது

சென்றதே

பூந்தென்றல் தூது தூது தூது

 

குங்குமப் பொட்டின் மங்கலம்

நெஞ்சம் இரண்டின் சங்கமம்

நெஞ்சம் இரண்டின் சங்கமம்

இன்றெனக் கூடும்

இளமை ஒன்றெனப் பாடும்...இந்த அழகிய பாடலை டிஎம்.சௌந்தர்ராஜனும், பி.சுசீலாவும் இணைந்து பாடினர். பாடல் வெளியான போது ரசிகர்கள் அதனை கொண்டாடித் தீர்த்தனர். படத்தின் வெற்றியில் இந்தப் பாடலுக்கும் பங்குண்டு. கே.சங்கர் பாடலின் சிறப்பு கெடாமல் படமாக்கியிருந்தார்.

இவ்வளவு சிறந்த பாடலை எழுதிய ரோஷனரா பேகம் முஸ்லீம் பெண்களுக்கு அந்தக் காலத்தில் இருந்த கட்டுப்பாடுகள் காரணமாக தொடர்ந்து எழுதவில்லை. ஒரேயொரு பாடலுடன் திரைப்பயணத்தை முடித்துக் கொண்டார். அவருக்கு இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது உள்ளிட்ட விவரங்களை இயக்குனர் டி.விஜயராஜ் ஆவணப்படுத்தியுள்ளார்.

அந்தக் காலத்தில் கோவையில் பிரபலமாக இருந்த ஷைனிங் ஸ்டார் மோட்டார்ஸின் உரிமையாளர் ஷேக் முஸ்தபாவின் மகள் ரோஷனரா பேகம். கோவை செயின்ட் ஃபிரான்சிஸ் கான்வென்டில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போதே எழுத்தாற்றலுடன் திகழ்ந்தார். சொந்தமாக மெட்டமைத்து பாடல் புனையும் திறமை அவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

ஷேக் முஸ்தபாவுக்கும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் இடையில் நல்லுறவு இருந்துள்ளது. அவர் ரோஷனராவின் திறமையை அறிந்து ஊக்குவித்துள்ளார். அவரது சிபாரிசின் பேரில் குடியிருந்த கோயில் படத்தில் பாடல் எழுத ரோஷனராவுக்கு வாய்ப்பு கிடைத்தது. கோவையிலிருந்து சென்னை வந்து, சில நாட்கள் தங்கியிருந்து பாடலை எழுதியுள்ளார். அதன் பிறகு அவர் எந்தப் பாடலும் எழுதவில்லை.

இந்தத் தகவல்களை இப்போது சொல்ல காரணம், எழுத்தாளர் செந்தூரம் ஜெகதீஷ், குங்குப் பொட்டின் மங்கலம் ரோஷனரா பேகம் எழுதியதுதானா, பாடல் வரிகள் கண்ணதாசனின் பாணியை கொண்டிருப்பதால் எம்.எஸ்.வி. கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு தந்திரமாக ரோஷனரா பெயரை தந்தாரா என்ற மோசமான சந்தேகத்தை எழுப்பியுள்ளார். உரிமைக் குரல் படத்தில் இடம்பெற்ற, விழியே கதை எழுது... பாடலை எழுதியவர் கண்ணதாசன். ஆனால், அப்பாடல் வாலி எழுதியதாக அக்காலத்தில் பலரும் தவறாக கருதினர். பிறகு தவறு நேர் செய்யப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி, குங்குப் பொட்டின் மங்கலத்திலும் இப்படி நேர்ந்திருக்கலாமே என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

Also read... திரையரங்குகள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டால் அரசிற்கு வரும் வரி வருவாய் அதிகரிக்கும் - தனஞ்செயன்

ஆனால், இந்த சந்தேகம் முற்றிலும் தவறானது. குறிப்பிட்ட பாடலை எழுதியவர் ரோஷனரா பேகமே. அவரையும், பாடலைப் பாடிய டி.எம்.சௌந்தர்ராஜனையும் இயக்குனர் டி.விஜயராஜ் பேட்டி எடுத்துள்ளார். அதில் இதுபோன்ற சந்தேகங்கள் எதையும் யாரும் முன்வைக்கவில்லை. சிறந்த வரிகளை ஒரு பெண்ணால் எப்படி எழுத முடியும் என்ற காழ்ப்புணர்ச்சியை தவிர இந்த குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. ரோஷனரா பேகம் தொடர்ந்து பாடல்கள் எழுதாமல் போனது துரதிர்ஷடம். இறுக்கமான மதப்பின்னணி கொண்ட சமூகத்திலிருந்து ஒரு பெண் திரைப்படத்துக்குப் பாடல் எழுதுவதே அரிது. அந்த அரிய நிகழ்வின் அறுவடையை தட்டிப் பறிக்க முயல்வது சரியல்ல.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Jayalalitha, MGR

அடுத்த செய்தி