செயற்கை காலுடன் பிரபுதேவா நடிக்கும் பொய்க்கால் குதிரை - பர்ஸ்ட் லுக் வெளியீடு!

பொய்க்கால் குதிரை

பிரபுதேவாவின் நடனத்திறமையை மனதில் வைத்தே இதுவரை அவரை படங்களில் பயன்படுத்தி வந்தனர். அதற்கு முற்றிலும் மாறாக செயற்கை காலுடன் அவரை காட்டியுள்ளார் சந்தோஷ் ஜெயக்குமார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் பிரபுதேவா நடிப்பில் இயக்கும் படத்துக்கு பொய்க்கால் குதிரை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவா நடித்திருக்கும் பொன்மாணிக்கவேல் திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த மாதம் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. வரலட்சுமியும் இதில் கலந்து கொண்டார். முக்கிய வேடத்தில் அவர் நடிக்கிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட்லுக் இன்று வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று பர்ஸ்ட் லுக் வெளியானது. படத்துக்கு பொய்க்கால் குதிரை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் செயற்கைகால் பொருத்திய தோற்றத்தில் பிரபுதேவாவின் படம் இடம்பெற்றுள்ளது



Also read... D44 படத்தில் பாரதிராஜாவுடன் இணையும் தனுஷ் - நாளை முதல் படப்பிடிப்பு!

பிரபுதேவாவின் நடனத்திறமையை மனதில் வைத்தே இதுவரை அவரை படங்களில் பயன்படுத்தி வந்தனர். அதற்கு முற்றிலும் மாறாக செயற்கை காலுடன் அவரை காட்டியுள்ளார் சந்தோஷ் ஜெயக்குமார். இந்த வித்தியாசமான தோற்றமே படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.  டார்க்ரூம் பிக்சர்ஸும், மினி ஸ்டுடியோவும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.
Published by:Vinothini Aandisamy
First published: