33 பிரபலங்கள் வெளியிடும் அருண் விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக்...!

அருண் விஜய்

அருண் விஜய்யின் 33 வது படத்தை ஹரி இயக்கி வருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அருண் விஜய்யின் 33 வது படத்தின் பர்ஸ்ட் லுக்கை 33 பிரபலங்கள் இன்று மாலை வெளியிடுகிறார்கள்.

அருண் விஜய்யின் 33 வது படத்தை ஹரி இயக்கி வருகிறார். ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ப்ரியா பவானி சங்கர் இதில் நாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு, சமுத்திரகனி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அருண் விஜய்யின் 33 வது படம் என்பதால், 33 திரைபிரபலங்கள் இந்த பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர். அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ மேனன், பா.இரஞ்சித், கீர்த்தி சுரேஷ், ஆர்யா, டொவினோ தாமஸ், நவீன், அதர்வா, விக்னேஷ் சிவன், வெங்கட்பிரபு, நிக்கி கல்ராணி, மகிமா நம்பியார்... என அந்தப் பட்டியல் நீள்கிறது

Also read... மார்டன் உடையில் தந்தையின் பட பூஜையில் கலந்துகொண்ட அதிதி...!ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.. கேஜிஎஃப் படத்தில் கருடா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ராமச்சந்திர ராஜு இதில் வில்லனாக நடித்துள்ளார். ஹரியின் வழக்கமான ஆக்ஷன் சென்டிமெண்டில் இந்தப் படம் தயாராகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: