முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகிறது அஜித்-61 படத்தின் தலைப்பு!

இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகிறது அஜித்-61 படத்தின் தலைப்பு!

அஜித் மற்றும் மஞ்சு வாரியர்

அஜித் மற்றும் மஞ்சு வாரியர்

நேர்கொண்ட பார்வை,  வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் தன்னுடைய 61 வது திரைப்படத்தில் அஜித் குமார் நடித்த வருகிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் அவரின் 61ஆவது திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகிறது.

நேர்கொண்ட பார்வை,  வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் தன்னுடைய 61 வது திரைப்படத்தில் அஜித் குமார் நடித்த வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் அந்த திரைப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில் மீதம் இருக்கும் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெறுகிறது.  இதற்காக இயக்குநர் உள்ளிட்ட  படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர்.

Also read... 43 வருடங்களுக்கு முன் கமல் படத்தில் இடம்பெற்ற விஜயின் திருப்பாச்சி படக்காட்சி

அத்துடன் நடிகர் அஜித் வரும் 23ஆம் தேதி அங்கு செல்கிறார். இந்த நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை இன்று மாலை 6 மணிக்கு மேல் படக் குழுவினர் வெளியிட உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கான முதல் பார்வை தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Manju Warrier