முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விறுவிறுப்பாக நடைபெறும் லவ் டுடே படத்தின் இறுதி கட்டப் பணிகள்!

விறுவிறுப்பாக நடைபெறும் லவ் டுடே படத்தின் இறுதி கட்டப் பணிகள்!

லவ் டுடே

லவ் டுடே

இதே தலைப்பை வேறொரு திரைப்படத்திற்கு வைக்க திட்டமிட்டதால் உடனடியாக லவ் டுடே என்ற தலைப்பை சமீபத்தில் முதல் பார்வையுடன் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 1-MIN READ
  • Last Updated :

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் லவ் டுடே திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

கோமாளி திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தற்போது லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் தயாரிக்கிறது.  மேலும் யுவன் ஷங்கர் ராஜா அந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

அதேபோல் நாச்சியார் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்த இவானா நாயகியாக நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு வேலைகள் கடந்த ஆண்டு தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளன.  இதைத்தொடர்ந்து இறுதி கட்டப் பணிகளை துரிதப்படுத்தி உள்ளார்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

Also read... அருண் விஜயின் யானை படத்தில் 5 நிமிட காட்சி நீக்கம்?

மேலும் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வரும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். விஜய் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான லவ் டுடே என்ற திரைப்படத்தின் தலைப்பை மீண்டும் இந்த திரைப்படத்திற்கு வைத்துள்ளனர்.  இதற்காக முறையான அனுமதியைப் பெற்று தலைப்பை வைத்ததாகவும் படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

இதே தலைப்பை வேறொரு திரைப்படத்திற்கு வைக்க திட்டமிட்டதால் உடனடியாக லவ் டுடே என்ற தலைப்பை சமீபத்தில் முதல் பார்வையுடன் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. லவ் டுடே திரைப்படத்தின் சில புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment