Home /News /entertainment /

வெளியானது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரெய்லர்!

வெளியானது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரெய்லர்!

நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

    சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இவர்களை தவிர்த்து ஹரிகிருஷ்ணன், வினோத், சுபத்ரா, ராபர்ட், சபீர் உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். இந்த படத்தின் போஸ்டர்கள் வானவில்லை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. இந்த படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார்.

    Also read... சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தில் நாயகியாகும் திஷா பதானி!

    நட்சத்திரம் நகர்கிறது படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.



    இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் காதலுக்கு பின்னால் இந்த சமூகம் உருவாக்குற கதைகள் குறித்து உள்ளதாகவும் இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Pa. ranjith

    அடுத்த செய்தி