Home /News /entertainment /

நடிகர் அருள்நிதியின் தேஜாவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் அருள்நிதியின் தேஜாவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தேஜாவு

தேஜாவு

அறிமுக இயக்குனர் அரவிந்த்சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள் நிதி நடித்துள்ள படம் தேஜாவு. இப்படத்தில் நடிகை ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

  • News18
  • Last Updated :
    நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள தேஜாவு படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    அறிமுக இயக்குனர் அரவிந்த்சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள் நிதி நடித்துள்ள படம் தேஜாவு. இப்படத்தில் நடிகை ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

    இத்திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பாக கே.விஜய் பாண்டி தயாரித்து இருக்கிறார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    Also read... தமிழர் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் வைரமுத்துவிற்கு இன்று பிறந்தநாள்!

    மிஸ்டரி திரில்லர் வகை கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் தேஜாவு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சூழ்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் இத்திரைப்படம் வரும் 22ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    மேலும் அருள்நிதி தற்போது இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் 'டைரி'படத்திலும், விஜய் குமார் இயக்கத்தில் 'டி பிளாக்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment

    அடுத்த செய்தி