Home /News /entertainment /

நடிகர் ஜெய்யின் எண்ணித்துணிக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் ஜெய்யின் எண்ணித்துணிக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெய்யின் எண்ணித்துணிக

ஜெய்யின் எண்ணித்துணிக

’எண்ணித் துணிக’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

  • News18
  • Last Updated :
    நடிகர் ஜெய்யின் நடிப்பில் உருவாகியுள்ள எண்ணித்துணிக படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெய் - அதுல்ய ரவி ஜோடியாக நடித்திருக்கும் படம் எண்ணித்துணிக. இப்படத்தில் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, ஜி மாரி முத்து உள்பட பலர் நடித்துள்ளனர்.

    சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்ததாக செய்திகள் வெளியானது.

    கேப்மாரி படத்திற்கு பிறகு மீண்டும் அதுல்யா, ஜெய் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை ரெயின் ஆப் ஆரோவ்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ’எண்ணித் துணிக’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    Also read... சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்த கவுண்டமணி



    இந்த நிலையில் தற்போது இந்த படம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணியை விரைவில் தொடக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment

    அடுத்த செய்தி