ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொங்கலுக்கு ரிலீசாகிறது விஜய் நடிக்கும் வாரிசு! அசத்தல் லுக்குடன் அப்டேட் விட்ட படக்குழு!

பொங்கலுக்கு ரிலீசாகிறது விஜய் நடிக்கும் வாரிசு! அசத்தல் லுக்குடன் அப்டேட் விட்ட படக்குழு!

வாரிசு

வாரிசு

படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விஜய் நடிக்கும் வாரிசு படம் வரும் பொங்கல் அன்று வெளியாகிறது என்று படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

    இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

    சமீபத்தில் படத்தின் வியாபார பணிகளை தயாரிப்பாளர் தில் ராஜு தொடங்கினார்.  அதில் முதல் கட்டமாக தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் உள்ளிட்டவற்றை முடித்தார்.

    Also read... பெண் குழந்தைக்கு அப்பாவான யோகி பாபு.. தீபாவளி தினத்தன்று வீட்டில் விசேஷம்!

    அதில் தொலைக்காட்சி உரிமைத்தை சன் தொலைக்காட்சி 50 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.  அதேபோல் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 60 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

    இதைத்தொடர்ந்து வெளிநாட்டு உரிமத்தை 32 கோடி ரூபாய்க்கு Phars Films நிறுவனமும், இந்தி டப்பிங் உரிமையை 32 கோடிக்கு Goldmines நிறுவனமும் கைபற்றியுள்ளது.

    இந்நிலையில் வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம்அறிவித்துள்ளது. தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்ததுடன் பொங்கலுக்கு வாரிசு படம் ரிலீஸ் ஆகின்றது என்றும் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Vijay