ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தேசிய விருதுகளை வென்ற சூரரைப்போற்று திரைப்படம்... ஆன்லைனில் எங்கு பார்க்கலாம்? ஓடிடி லிங்க் இதோ

தேசிய விருதுகளை வென்ற சூரரைப்போற்று திரைப்படம்... ஆன்லைனில் எங்கு பார்க்கலாம்? ஓடிடி லிங்க் இதோ

சூரரைப்போற்று

சூரரைப்போற்று

தமிழில் அதிகப்பட்சமாக சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. நடிகர் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியானது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தமிழில் அதிகப்பட்சமாக 5 தேசிய விருதுகளை வென்ற சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கின்றது.

இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழில் அதிகப்பட்சமாக சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. நடிகர் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியானது.

Also read... தேசிய விருதுகளை வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம்... ஆன்லைனில் எங்கு பார்க்கலாம்? ஓடிடி லிங்க் இதோ

இந்தப்படத்தில் அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, பூ ராமு உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கிய சூர்யாவுக்கு தற்போது சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி. பிரகாஷிற்கு, சிறந்த இயக்குநருக்கான விருது சுதா கொங்கராவிற்கும், சிறந்த நடிகைகான விருது அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகளையும் இந்தப் படம் பெற்றுள்ளது.

படத்தை பார்க்க லிங்க் இங்கே...

விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தேசிய விருதுகளை குவித்த சூரரைப்போற்று படம் அமேசான் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya, Amazon Prime, National Film Awards, Soorarai Pottru