Home /News /entertainment /

தேசிய விருதுகளை வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம்... ஆன்லைனில் எங்கு பார்க்கலாம்? ஓடிடி லிங்க் இதோ

தேசிய விருதுகளை வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம்... ஆன்லைனில் எங்கு பார்க்கலாம்? ஓடிடி லிங்க் இதோ

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த தமிழ் படத்திற்கான விருது வசந்த் இயக்கத்தில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கின்றது.

    68வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கி பல்வேறு பிரிவுகளுக்கு தேசிய விருகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டன.

    சிறந்த தமிழ் படத்திற்கான விருது வசந்த் இயக்கத்தில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம், 3 பெண்களின் கதையை ஆந்தாலஜி ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கும். இவர்களின் வழியே சமூகத்தில் உள்ள பெரும்பாலான பிரச்னைகளை பேசும் வகையில் படத்தை இயக்குனர் வசந்த் அமைத்திருப்பார்.

    Also read... National Film Awards : சிறந்த வசனம், அறிமுக இயக்குநர் - இரண்டு தேசிய விருதைப் பெற்ற மண்டேலா படம்!

    யதார்த்த சினிமா மூலம் பெண்களின் பிரச்னையை பேசும் இந்த படத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்திருந்தனர். சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் தேசிய விருது விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் ஹம்சா புரொடக்சன்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்திருந்தார்.

    படத்தை பார்க்க லிங்க் இங்கே...

    விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் காணக்கிடைக்கின்றது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, National Film Awards

    அடுத்த செய்தி