Home /News /entertainment /

உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன்

உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன்

பிரசாந்த் முருகேசன், உதயநிதி

பிரசாந்த் முருகேசன், உதயநிதி

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜ் கமல் நிறுவனம் மூலம் கமல்ஹாசன் பல படங்களை தயாரிக்கவுள்ளார். அதில் அந்த நிறுவனத்தின் 54வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். அதற்கான அறிவிப்பை சமீபத்தில் கமல்ஹாசன் வெளியிட்டார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் படத்தை பிரசாந்த் முருகேசன் இயக்குகிறார்.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜ் கமல் நிறுவனம் மூலம் கமல்ஹாசன் பல படங்களை தயாரிக்கவுள்ளார். அதில் அந்த நிறுவனத்தின் 54வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். அதற்கான அறிவிப்பை சமீபத்தில் கமல்ஹாசன் வெளியிட்டார். ஆனால் அந்தப் படத்தை யார் இயக்குகிறார் என்பதை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் பிரசாந்த் முருகேசன் அந்தப் படத்தை இயக்கவுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே  சசிகுமார் நடிப்பில் வெளியான கிடாரி திரைப்படத்தையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை கொண்டு எடுக்கப்பட்ட குயின் இணையத் தொடரையும் இயக்கியுள்ளார்.

Also read... 37 வருடங்களுக்கு முன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலின் இந்திப் படம்

இதையடுத்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. மாமன்னன் படத்தின் வேலைகளை முடித்துக்கொண்டு ராஜ் கமல் நிறுவனம் படத்தில் உதயநிதி இணைவார் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி