ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தேசிய விருதுகளை வென்ற மண்டேலாதிரைப்படம்... ஆன்லைனில் எங்கு பார்க்கலாம்? ஓடிடி லிங்க் இதோ

தேசிய விருதுகளை வென்ற மண்டேலாதிரைப்படம்... ஆன்லைனில் எங்கு பார்க்கலாம்? ஓடிடி லிங்க் இதோ

மண்டேலா

மண்டேலா

ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் வழங்க இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மண்டேல.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

2022-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த வசனத்திற்கான விருது மற்றும் அறிமுக இயக்குநருக்கான விருதையும் மண்டேலா படம் பெற்றுள்ளது.

இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு பிரிவுகளில் மண்டேலா படம் தேசிய விருதினை பெற்றுள்ளது.

ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் வழங்க இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மண்டேல. இந்தப் படத்தில் ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேரடியாக இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

அதைத்தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது ‘மண்டேலா’ படம். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் முதல் படத்திலேயே தனக்கென தனி முத்திரை பதித்திருந்தார் இயக்குநர் மடோன் அஸ்வின். மேலும், அரசியல் நையாண்டி படமான மண்டேலா இந்த வருட ஆஸ்கர் போட்டிக்கான 14 படங்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.

Also read... தேசிய விருதுகளை வென்ற சூரரைப்போற்று திரைப்படம்... ஆன்லைனில் எங்கு பார்க்கலாம்? ஓடிடி லிங்க் இதோ

இந்நிலையில் இன்று 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதில் மண்டேலா படத்திற்கு சிறந்த வசனத்திற்கான விருதினையும், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதினையும் மண்டேலா படம் பெற்றுள்ளது.

படத்தைப் பார்க்க லிங்க் இங்கே...

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற மண்டேலா படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, National Film Awards, Netflix, Yogi babu