Home /News /entertainment /

மாஸ்டர் படத்தை விட 100 கோடிக்கு அதிகமாக வியாபாரம் செய்யுமா வாரிசு படம்?

மாஸ்டர் படத்தை விட 100 கோடிக்கு அதிகமாக வியாபாரம் செய்யுமா வாரிசு படம்?

வாரிசு

வாரிசு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்திருக்கும் விஜய் படங்கள் வசூலில் சாதனைப் படைத்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் அதிக வசூல் செய்த படங்களை கொடுத்த நடிகர் என்ற பெயரையும் எடுத்துள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வியாபாரத்தில் புதிய சாதனைப் படைக்கும் என திரைத்துறையினர் கணிக்கின்றனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்திருக்கும் விஜய் படங்கள் வசூலில் சாதனைப் படைத்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் அதிக வசூல் செய்த படங்களை கொடுத்த நடிகர் என்ற பெயரையும் எடுத்துள்ளார்.

விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகிறது. அந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். அதேபோல் தில் ராஜு தயாரிக்கிறார். இதை தமிழ், தெலுங்கு, மலையாளம் என Pan Indian திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் திட்டமிடுகிறார்.

இதனால் படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய் தொடும் என்று சினிமா துறையில் கூறுகின்றனர். அதில் விஜய் சம்பளம் மட்டும் 120 கோடி ரூபாய். அவரை தவிர எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். இதனால் படத்தின் பட்ஜெட்டில் 70 சதவீதம் சம்பளமாகவே செலவிடப்படுகிறது.

வாரிசு படத்திற்கு பெரிய பட்ஜெட்டை செலவிட்டுள்ள தயாரிப்பாளர் தில் ராஜு, அதன் வியாபாரத்தையும் பெரிதாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. அதில் முதல்கட்டமாக தொலைக்காட்சி உரிமையை சன் நிறுவனம் 50 கோடிக்கும், டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 60 கோடி ரூபாய்கும் வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் வாரத்திற்குள் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

இதை தவிர, இந்தி டப்பிங் உரிமையை Goldmines நிறுவனம் 32 கோடிக்கும், Overseas உரிமையை Phars Films நிறுவனம் 32 கோடி ரூபாய்க்கும் கைபற்றியுள்ளது. அதேபோல் படத்தின் இசை உரிமையை T-Series நிறுவனம் 10 கோடி ரூபாய்க்கு பேசி முடித்துள்ளது. இதன் மூலம் மட்டுமே 184 கோடி ரூபாய் வியாபாரம் நடைபெற்றுள்ளது.

இந்த உரிமைகள் தவிர்த்து இந்திய வெளியீடு வியாபாரம் உள்ளது. அதில் தமிழக உரிமை 60 கோடி முதல் 65 கோடி வரை வியாபாரம் நடைபெற வாய்ப்பு உள்ளது என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். மேலும் கேரளா மற்றும் கர்நாடகா உரிமை தலா 7 கோடிக்கும், ஆந்திரா - தெலங்கானா உரிமை 15 கோடி முதல் 20 கோடி வரையிலும் விற்பனையாகலாம் என்று திரைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் சுமார்  270 கோடி முதல் 280 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்யும் என திரைத்துறையினர் உறுதியாக கூறுகின்றனர். இது விஜய் படங்களில் அதிக வியாபாரம் செய்த படமாக இருக்கும் எனவும் தெரிவிக்கிறனர்.

வாரிசு படத்திற்கு முன் வெளியான பீஸ்ட் படத்தை சன் நிறுவனம் ரெட் ஜெயண்ட் மூலம் வெளியிட்டனர். அதேபோல் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமமும் அவர்கள் வசமே இருந்தது. இதனால் பீஸ்ட் வியாபாரம் பற்றி துல்லியமான விவரம் வெளியாகவில்லை.

Also read... ரூ. 6 கோடி செலவில் உருவாகும் படங்கள் சிறிய பட்ஜெட் படங்களாக கருதப்படும் - தயாரிப்பாளர் சங்கம், பெப்சி ஒப்பந்தம்!

ஆனால் மாஸ்டர் படம் தமிழகத்தில் 60 கோடிக்கும், கேரளா 4 கோடிக்கும், ஆந்திரா 6 கோடிக்கும், கர்நாடகா 4.5 கோடிக்கும் வியாபாரம் செய்யப்பட்டது. அது தவிர ஓவர்சீஸ் வியாபரம் 30 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு பல நாடுகளில் இருந்ததால் அந்த ஒப்பந்தம் 13 கோடிக்கு மாற்றப்பட்டது.

அதேசமயம் டிஜிட்டல் 40 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமம் 22 கோடிக்கும், இசை உரிமை 4 கோடிக்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் மாஸ்டர் படம் ஒட்டுமொத்தமாக 155 கோடிக்கே விற்பனை செய்யப்பட்டது.

அந்தப் படம் கொரோனா அல்லாத காலகட்டத்தில் வெளியாகியிருந்தால் இன்னும் பெரிய வியாபாரம் செய்திருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். இருந்தாலும் வாரிசு படம் மாஸ்டரைவிட 100 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் செய்யும் என திரைத்துறையினர் கணிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay, Entertainment

அடுத்த செய்தி