Raashi Khanna: சினிமாவில் ஆணாதிக்கம் உள்ளது - நடிகை ராஷி கண்ணா

ராஷி கண்ணா

தெலுங்கு சினிமாவில் நீங்கள் நிலைக்க வேண்டுமென்றால், அனுஷ்கா அல்லது சமந்தா போல ஒரு நல்ல நடிகையாக இருக்கவேண்டும்.

  • Share this:
    சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பதாக நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ராஷி கண்ணா. தமிழில் இவர் விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத்தமிழன் திரைப்படத்திலும், விஷால் ஜோடியாக அயோக்யா திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    அண்மையில் பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த நடிகை ராஷி கண்ணா, “நான் படங்களில் நடிக்கத் தொடங்கியபோது ’ஊஹலு குஸகுஸலடே’ படத்தின் மூலம் நல்ல நடிகை என்ற பெயர் எனக்குக் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு கிடைத்தவை எல்லாம் கமர்ஷியல் படங்களே. அதன் பிறகு ‘தோழி ப்ரேமா’ படம் தான் அனைத்தையும் மாற்றி எனக்கு நடிக்கவும் தெரியும் என்று மக்களுக்குத் தெரியச் செய்தது. சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாகவே இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தெலுங்கு சினிமாவில் நீங்கள் நிலைக்க வேண்டுமென்றால், அனுஷ்கா அல்லது சமந்தா போல ஒரு நல்ல நடிகையாக இருக்கவேண்டும். இவர்கள் இருவரையும் ரோல் மாடலாக கூட எடுத்து கொள்ளலாம். மேலும் அனுஷ்கா, சமந்தா இருவரும் தென்னிந்திய நடிகைகள் குறித்து மக்கள் மத்தியில் இருந்த பார்வையை மாற்றியவர்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: