முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 8 நாட்கள்.. வசூலில் லாபத்தை தொட்ட தனுஷின் வாத்தி திரைப்படம்.. இயக்குநர் சொன்ன வசூல் விவரம்!

8 நாட்கள்.. வசூலில் லாபத்தை தொட்ட தனுஷின் வாத்தி திரைப்படம்.. இயக்குநர் சொன்ன வசூல் விவரம்!

வெங்கி அட்லூரி

வெங்கி அட்லூரி

கல்வியின் வியாபாரம் குறித்து வாத்தி திரைப்படத்தில் படமாக்கி இருந்தனர்.  மேலும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கூறியிருந்தனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாத்தி திரைப்படம் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.

திருச்சிற்றம்பலம்,  நானே வருவேன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் வாத்தி.  இந்த திரைப்படத்தை தெலுங்கு திரையுலகை சேர்ந்த வெங்கி அத்லூரி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வாத்தி திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.  பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க தனுஷூடன், சம்யுக்தா மேனன், சமுத்திரகனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், சாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

1990களில் உருவெடுத்த கல்வி வியாபாரத்தின் பின்னணியில் வாத்தி திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 1998 இல் இருந்து 2000-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.  கல்வியை வியாபாரமாக பார்க்கும் பெரும்புள்ளிகளுக்கும்,  கல்வியை சேவையாக பார்க்கும் ஒரு ஆசிரியருக்கும் இடையேயான மோதலே வாத்தி.

கல்வியின் வியாபாரம் குறித்து வாத்தி திரைப்படத்தில் படமாக்கி இருந்தனர்.  மேலும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கூறியிருந்தனர். இந்த நிலையில் பட வெளியாகி 10 நாட்களை நெருங்கி இருக்கும் நிலையில் பட குழுவினர் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். அத்துடன் செய்தியாளர்களையும் சென்னையில் சந்தித்தனர். அதில் பேசிய இயக்குனர் வெங்கி அட்லூரி, வாத்தி திரைப்படம் உலகம் முழுவதும் எட்டு நாட்களில் 75 கோடி வசூலித்திருப்பதாக கூறினார். தமிழில் வெற்றி அடைய வேண்டும் என்ற தன்னுடைய ஆசை தற்போது நிறைவேறி இருப்பதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  அத்துடன் திரைக்கு பின்னால் வேலை செய்த படக் குழுவினரை மேடைக்கு அழைத்து வெங்கி அட்லூரி பாராட்டி நன்றி தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Dhanush