’டான்’ படம் நடிப்பதற்கான வாய்ப்பு முதலில் எனக்கு தான் வந்தது என்றும் அதனை தவிர்த்ததற்கான காரணத்தையும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த டான் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 125 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வெற்றிக்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன், சூரி, எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் சிபி, சக்கரவர்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சூரி டான் திரைப்படத்தின் கதையை இயக்குனர் கூறியபோது தனக்கு நகைச்சுவையே இல்லை என்று கூறினார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதன் பின் கதாபாத்திரத்தின் தன்மையை எடுத்து கூறினார். இயக்குனர் அதன்பின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு சமயத்தில் டான் திரைப்படத்தின் இடம்பெற்ற புதிய மொழி குறித்த நகைச்சுவை வசனம் பேசுவதற்கு சிரமமாக இருந்தது. இயக்குனர் கூறியதில் வெறும் 50 சதவீதத்தை மட்டுமே நான் பேசினேன். என்னைவிட இயக்குனர் சிபி அந்த வசனத்தை சிறப்பாக பேசி காட்டினார். இருந்தாலும் திரைப்படத்தில் இடம் பெற்றது 50% என கூறினார். அத்துடன் இயக்குனர் சிபி சிறப்பாக வேலை வாங்கினார். அவருக்கு தேவையானது கிடைக்கும் வரை திரும்பத் திரும்ப எடுத்துக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் படத்தில் நடித்த நாயும், நானும் ஒன்றாக படுத்து இருந்தோம் என நகைச்சுவையாக கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அனிருத், தங்கள் கூட்டணியில் வெளியான எதிர்நீச்சல் 25 கோடி ரூபாய் வசூல் செய்தது. தற்போது 10 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படம் 125 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என பெருமிதமடைந்தார். அடுத்து 200 கோடி ரூபாய் வசூலுக்கு அதிக காலம் எடுத்துக்கொள்ள வேண்டாம். விரைவில் அதை நாம் எட்டுவோம் என சிவகார்த்திகேயனிடம் கூறினார்.
டான் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட உதயநிதி, இரண்டு உண்மைகளை கூறுவதாக தெரிவித்தார். அதில் முதலாவது இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு, என்னுடன் இருந்தவர்களிடம் இதற்கு சிரிப்பு வருகிறதா என கேட்டேன். ஆனால் இரண்டாம் பாதியில் இறுதி ஒரு மணி நேரத்தில் இருந்த அப்பா மகன் செண்டிமெண்டை பார்த்துவிட்டு படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் என கூறினேன். இன்று டாக்டர் படத்தின் வசூலை மூன்றே வாரங்களில் கடந்துவிட்டது என தெரிவித்தார். இரண்டாவது உண்மை, இந்தப் படம் முதலில் எனக்குதான் வந்தது. ஆனால் நான் பள்ளி மாணவனாக நடித்தால் நன்றாக இருக்காது என தவிர்த்துவிட்டேன். செண்டிமெண்ட் காட்சிகள் எனக்கு செட் ஆகியிருக்காது. சிபி நீங்கள் தப்பித்துவிட்டீர்கள் என நகைச்சுவையாக கூறினார் உதயநிதி.
இவ்வாறு விழாவில் கலந்து கொண்ட பலரும் நகைச்சுவையாக பேசியது போலவே இயக்குனர் சிபிசக்கரவர்த்தி பல்வேறு சம்பவங்களை சுவாரசியமாக பகிர்ந்தார். அதேசமயம் பெற்றோர்களின் மீது மரியாதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை எடுத்ததாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும் படத்தை பார்த்து ஒருவராவது பெற்றோரிடம் நல்லபடியாக நடந்துகொண்டால் வெற்றி என நினைத்தேன். ஆனால் இன்று எனக்கு பலர் கால் செய்து நெகிழ்ச்சியுடன் பல சம்பவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். மக்கள் விமர்சனங்களில் இந்தப் படத்தை பார்த்து என் மகன் மாற்றமடைந்துள்ளான் என கூறுகின்றனர். அதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
Also read... மீண்டும் தொடங்கியது ரஜினி - கமல் படங்களுக்கு இடையே வசூல் போட்டி
இன்று தமிழ் சினிமாவில் நல்ல கதைகள் வருவதில்லை என்ற கருத்து எழுந்துள்ளது. இதை மாற்ற பெரிய நடிகர்களும், தயாரிப்பாளர்களும் மாற வேண்டும். புதிய இயக்குனர்களிடம் அவர்கள் கதை கேட்க வேண்டும். அதுவும் 10 நிமிடத்தில் கதை கேட்க கூடாது. எப்படிப்பட்ட கதையும் 10 நிமிடத்தில் சொல்ல முடியாது. குறைந்தது 2 மணி நேரமாவது வழங்குங்கள். நிறைய புதுமுக இயக்குனர்கள் கதை வைத்துக்கொண்டு டீ கடைகளிலும், பார்க்கிலும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். எனக்கு ஒருவார் வாய்ப்பு வழங்கியதால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன். அது போன்ற நிலை வரும்போது கண்டெண்ட் பிரச்னை இருக்காது என கேட்டுக்கொண்டார்.
இறுதியாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், டான் படத்தின் கதையை எப்படியாவது படமாக்கிவிட வேண்டும் என்று நினைத்தேன். அதனால் லைகா நிறுவனத்திற்கு கதை ஏற்பாடு செய்தேன். கொரோனா என்பதால் வீடியோ காலில் கதை கூறினார். ஆனால் கதை கேட்டப்பின் வேறு கதை எடுக்கலாம் என கூறினார்கள். ஆனால், இந்தப் படத்தை எடுக்க அவர்களை சம்மதிக்க வைத்தேன். இந்த படப்பிடிப்பில் விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை. நடிகர்கள்தான் துன்புறுத்தப்பட்டார்கள் என தன் பங்கிற்கு இயக்குனரை கலாய்த்தார்.
அதேபோல் சிபியுடன் நிறைய வாக்குவாதம் செய்துள்ளேன். இதுவரை நான் வேறு யாரிடமும் அவ்வாறு செய்தது இல்லை. ஆனால் சிபி தனக்கு வேண்டியதை பிடிவாதமாக இருந்து பெற்றார். அனைத்தும் படத்தின் வெற்றிக்காகவே என சிவகார்த்திகேயன் கூறினார்.
மேலும் டான் திரைப்படத்தை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன், ரஜினிகாந்தின் பாராட்டு டான் படத்தின் வெற்றியை முழுமையாக்கியதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் ஷீல்ட் பரிசாக வழங்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anirudh, Entertainment, Sivakarthikeyan, Udhayanidhi Stalin