Home /News /entertainment /

வெளியானது லவ் டுடே படத்தின் சாச்சிட்டாலே பாடல்

வெளியானது லவ் டுடே படத்தின் சாச்சிட்டாலே பாடல்

சாச்சிட்டாலே பாடல்

சாச்சிட்டாலே பாடல்

யுவன் சங்கர் ராஜாவின் 25 ஆண்டு கால திரையிசை பயணத்தை குறிக்கும் வகையில், இப்பாடலில் அவர் தோன்றியுள்ளார்.

  • News18
  • Last Updated :
    யுவன் சங்கர் ராஜா இசையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள லவ் டுடே படத்தின் ஒரு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

    அந்தப் படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆனால் படத்தின் தலைப்பை இதுவரை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள அந்தப் படத்திற்கு லவ் டுடே என தலைப்பு வைத்துள்ளனர்.

    Also read... குருதி ஆட்டம் படத்தை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்
     இதே தலைப்பில் விஜய் நடிப்பில் 1997-ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்தது. தற்போது அந்த தலைப்பை தன்னுடைய திரைப்படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் தேர்வு செய்திருக்கிறார்.




    இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள லவ் டுடே படத்தின் ஒரு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் 25 ஆண்டு கால திரையிசை பயணத்தை குறிக்கும் வகையில், இப்பாடலில் அவர் தோன்றியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Yuvan Shankar raja

    அடுத்த செய்தி