ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்ட திட்டம் இரண்டு சக்சஸ் மீட்...!

திட்டம் இரண்டு சக்சஸ் மீட்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள பூமிகா படத்தையும் சோனிலிவ்வே வெளியிட உள்ளது. அத்துடன் தெலுங்குப் படமொன்றை தமிழில் சோனிலிவ் ரீமேக் செய்கிறது. அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் நாயகி.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜுலை 30 சோனிலிவ் ஓடிடியில் வெளியான திட்டம் இரண்டு படத்தின் சக்சஸ் மீட்டை தயாரிப்பாளர் தனஞ்செயன் நடத்தியுள்ளார். அதில் படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

திரைப்படங்கள் வெளியாகி 100 நாள் தாண்டிய பிறகு விழா எடுத்து வந்தனர். பிறகு அது 50 நாள்களாக குறைந்து இறுதியில் இரண்டாவது நாளே சக்சஸ் மீட் கொண்டாடினர். அதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் வித்தகர். அஞ்சான் படத்தின் பர்ஸ்ட் லுக்குக்கே கேக் வெட்டி கொண்டாடினார். அதேபோல் வேட்டை படம் வசூலில் நொண்டியடிக்கையில், யுடிவி ரோனி க்ருவிலா படத்தில் ரொம்ப இம்ப்ரஸாகி அதை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் என்று கூட்டம் கூட்டி அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியிலேயே ரீமேக் பண்றாங்கன்னா அவ்ளோ தரமான படமா என்று வேட்டையை பார்க்க ஆசைப்படுவார்கள் இல்லையா? ஆனால், கடைசிவரை வேட்டை இந்தியில் ரீமேக் செய்யப்படவில்லை.

Also read... சந்தானத்தின் சர்வர் சுந்தரம், டிக்கிலோனா படங்கள் வெளியாவதில் என்ன சிக்கல்?

திட்டம் இரண்டு சுமாராகத்தான் போகிறது. ஆனாலும், படத்துக்கு விளம்பரம் வேண்டுமே. சக்சஸ்மீட் நடத்தி, எங்கப் படம் சூப்பர்ஹிட் என அறிவித்துள்ளனர். தனஞ்செயன் இந்தப் படத்தின் தயாரிப்பில் இல்லை. படம் வெளியான சோனிலிவ்வில் தமிழக பொறுப்பில் இருக்கிறார்

இதையடுத்து, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள பூமிகா படத்தையும் சோனிலிவ்வே வெளியிட உள்ளது. அத்துடன் தெலுங்குப் படமொன்றை தமிழில் சோனிலிவ் ரீமேக் செய்கிறது. அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் நாயகி. திட்டம் இரண்டை ஏன் சோனிலிவ் புரமோட் செய்கிறது என்பது புரிகிறதல்லவா.
Published by:Vinothini Aandisamy
First published: