கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இருந்து பத்தல பத்தல பாடலின் வீடியோ வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், சூர்யா, பகத் பாசில், விஜய்சேதுபதி என மல்டி ஸ்டார்களைக் கொண்டு உருவான விக்ரம் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 4 வாரங்களைக் கடந்த நிலையில் வார இறுதி நாட்களில் இந்தப் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுகிறது.
உலக அளவில் இந்தப் படம் ரூ. 400 கோடி வசூலை எட்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தியேட்டர் ரிலீஸில் மட்டும் சுமார் ரூ.500 கோடியை விக்ரம் எட்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
— Raaj Kamal Films International (@RKFI) June 29, 2022
இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான பத்தல பத்தல பாடல் சமூகவலைதளங்களில் மிகப்பெரிய கவனம் பெற்றது. இந்த பாடலின் வீடியோவுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் ஜூலை 1ம் தேதி இந்த பாடலின் வீடியோ வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.