Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழனாக நடிக்கும் ஜெயம் ரவி - வெளியானது போஸ்டர்

பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழனாக நடிக்கும் ஜெயம் ரவி - வெளியானது போஸ்டர்

ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி

ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுகின்றனர்.

  • News18
  • Last Updated :
    பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெறும் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு படக்குழுவினர் அறிமுகம் செய்துள்ளனர். 

    கல்கி நாவலை மையமாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கிய இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து படம் குறித்த செய்திகளையும் கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஆதித்ய கரிகாலன், வந்திய தேவன், நந்தினி, குந்தவை ஆகிய கதாபாத்திரங்களின் தோற்றங்களை வெளியிட்டனர்.



    அந்த வரிசையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவியின் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுகின்றனர்.

    இதன் காரணமாக ஒவ்வொரு திரையுலகிலும் உள்ள முன்னணி நடிகர்களை கொண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை வெளியிடுகின்றனர்.

    அந்த வகையில் தமிழ் டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிடுகிறார். அதே போல் இந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும்,  தெலுங்கில் மகேஷ்பாபுவும் வெளியிடுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Jayam Ravi, Ponniyin selvan

    அடுத்த செய்தி