முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நிறைவடைந்தது சுந்தர்.சி-யின் தலைநகரம் 2 படப்பிடிப்பு

நிறைவடைந்தது சுந்தர்.சி-யின் தலைநகரம் 2 படப்பிடிப்பு

தலைநகரம் 2

தலைநகரம் 2

தலைநகரம் 2 படத்தை சுந்தர் சி.யை வைத்து இருட்டு படத்தை எடுத்த துரை இயக்கியுள்ளார்.

  • Last Updated :

சுந்தர் சி நடித்திருக்கும் தலைநகரம் 2 படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

1995 இல் முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனரான சுந்தர் சி. தனது நகைச்சுவை காட்சிகளால் பிரபலமானார். ஒன்றிரண்டு திரைப்படங்களில் நடிகராக தலைகாட்டியவர் தனது மனைவி குஷ்புவின் விருப்பத்தின்படி 2006 இல் தலைநகரம் படத்தில் நாயகனானார்.

சுராஜ் இயக்கிய இந்தப் படம் வடிவேலின்நகைச்சுவையால் பரவலான கவனிப்பை பெற்று ஓடியது. அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்தவர், ஒருகட்டத்தில் மீண்டும் இயக்கத்துக்கு திரும்புவதாக அறிவித்தார். கலகலப்பு படத்தை எடுத்தார். இனி படம் மட்டுமே இயக்குவார் என்ற நம்பிக்கையை அவ்வப்போது தகர்த்து வந்தவர் தற்போது மீண்டும் நடிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

Also read... தீவிரமாக நடைபெறும் அங்கமாலி டைரீஸ் இந்தி ரீமேக் பணிகள்

தலைநகரம் 2 படத்தை சுந்தர் சி.யை வைத்து இருட்டு படத்தை எடுத்த துரை இயக்கியுள்ளார். இந்நிலையில் விறுவிறுப்பாக நடைப்பெற்றுவந்த தலைநகரம் 2 படப்பிடுப்பி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படமும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Sundar.C