குடும்பத்தகராறு காரணமாக மெரினா திரைப்பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை..

தற்கொலை செய்து உயிரிழந்த தென்னரசு, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா திரைப்படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

குடும்பத்தகராறு காரணமாக மெரினா திரைப்பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை..
உயிரிழந்த தென்னரசு
  • News18
  • Last Updated: September 29, 2020, 10:11 AM IST
  • Share this:
சென்னையில் குடும்பத்தகராறு காரணமாக திரைப்பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தென்னரசு என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு வயது குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தென்னரசு அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம், தகராறு செய்து வந்துள்ளார். தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்ற இன்று வீட்டில் உள்ள சீலிங் பேனில் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தென்னரசு.Also read... எஸ்.பி.பி மரணத்துக்கு காரணம் என்ன? - மருத்துவமனை விளக்கம்


இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து
உயிரிழந்த தென்னரசு, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா திரைப்படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

-----------------------------------------------------------------------------------மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading