• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • The Family Man 2: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ’தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ்

The Family Man 2: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ’தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ்

தி ஃபேமிலி மேன் 2

தி ஃபேமிலி மேன் 2

பரவலாக தமிழ் தேசிய அமைப்புகள் மத்தியில் தி பேமிலி மேன் வலைதொடருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

  • Share this:
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது இலங்கை தமிழர் போராட்ட விவகாரம்.

தமிழக அரசியலோடு இலங்கை தமிழர் விவகாரம் எப்பொழுதும் பிரிக்க முடியாத ஒன்றாகவே பன்னெடுங் காலமாக தொடர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சினிமா துறையில் இலங்கை, ஈழப் போராட்டம் தொடர்பான காட்சிகள் இடம்பெறும் போது அது மாபெரும் சர்சையாக வெடிப்பது வாடிக்கையாகி வருகிறது. இலங்கை இறுதிப்போர் காட்சிகளை மையப்படுத்தி இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக சந்தோஷ் சிவன் இயக்கிய இனம் திரைப்படம் தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது அடுத்து அந்த திரைப்படம் திரையரங்குகளில் இருந்து பின்வாங்க பட்டது. இனம் திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சந்தோஷ் சிவன் தொடர்ந்து கூறிவரும் நிலையில், தற்பொழுது OTT இல் வெளிவர உள்ள The Family man இரண்டாவது பாகமும் தமிழக அரசியலில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள பேமிலி மேன் வலைத்தொடர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ளது. இந்த வலைத்தொடரின் முதல் பாகம் பெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த ஒரு சராசரி மத்திய வயதுடைய ஒரு குடும்பத்தலைவர் இந்திய உளவு அமைப்பில் பணியாற்றுவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களை மனோஜ் பாஜ்பாய் கண்டறிந்து தடுக்கும் இந்த வலைத் தொடரில் சென்னையில் குண்டு வெடிப்பிற்கு இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதிகள் திட்டமிட படுவதாக காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முன்னோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த காட்சிகளில் இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத தமிழ் பெண்ணாக சமந்தா காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அண்மையில் வெளியான இந்த முன்னோட்டத்தில் தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த வலைத் தொடரை வெளியிடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து உள்ளதாகவும் மேலும் அவர்களுக்கு பாகிஸ்தானை சார்ந்த ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய காட்சி உருவாக்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது என குறிப்பிட்டுள்ள சீமான் இலங்கையில் இரண்டு லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது, குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையடுத்து பரவலாக தமிழ் தேசிய அமைப்புகள் மத்தியில் தி பேமிலி மேன் வலைதொடருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. வலை தொடரை இயக்கி உள்ள படக் குழுவினர் இந்த விவகாரம் குறித்து பேச ஆர்வம் காட்டாத நிலையில், ஆரம்பத்திலேயே இந்த வலைத்தொடரை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் வலை தொடர் வெளியான பின்னர் அதன் காட்சிகளை பார்த்துவிட்டு கருத்துக்களை முன்வைக்கலாம் எனவும் கூறுகிறார் பிரபல திரை விமர்சகர் பிஸ்மி.

ஜெ. பிஸ்மி, விமர்சகர்

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வரலாற்றை திரித்து மக்கள் மனதில் பதிய வைக்கும் முயற்சி இதுவென பரவலாக குற்றச்சாட்டு படும் நிலையில், 6 கோடி மக்களின் உணர்வுகளோடு தொடர்புடைய விவகாரத்தை படமாக்கி அதன் மூலம் விளம்பரம் தேட முயற்சி செய்யும் செயல் இது என குற்றம்சாட்டப்படுகிறது. வட இந்தியாவைச் சார்ந்த படைப்பாளிகள் தமிழர்களை இப்படி காட்சி படுத்தவே விரும்புகிறார்களா என்ற கேள்வியும் இதன் மூலம் எழுகிறதது, என்கிறார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: