The Family Man 2: தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம், காத்திருங்கள் - ஃபேமிலி மேன் இயக்குநர்கள்!

தி ஃபேமிலி மேன் 2

பேமிலி மேன் 2 தொடர் வரும் ஜூன் 2-ம் தேதி, அமேசான் ப்ரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிறது.

  • Share this:
    ’நாங்கள் தமிழர்களின் உணர்வுக்கும், கலாச்சாரத்துக்கும் மதிப்பளிக்கிறோம்’ என ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள தி ஃபேமிலி மேன் 2 இந்தி தொடரில் தமிழர்களை தீவிரவாதிகள் போன்று காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதையடுத்து அத்தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய தகவல் - ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை எழுதினார்.

    பேமிலி மேன் 2 தொடர் வரும் ஜூன் 2-ம் தேதி, அமேசான் ப்ரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்படவுள்ள தி ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய வலியுறுத்தி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Manoj Bajpayee (@bajpayee.manoj)





    இதற்கிடையே, ”டிரைலரில் உள்ள ஒன்றிரண்டு காட்சிகளை வைத்து முடிவு செய்யாதீர்கள். எங்களுடைய எழுத்தாளர்கள் குழுவில் பெரும்பாலானோர் தமிழர்கள். நாங்கள் தமிழர்களின் உணர்வுக்கும் கலாசாரத்துக்கும் மதிப்பளிக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். தொடர் வெளியாகும் வரை காத்திருக்கவும். பின்னர் நீங்களே பாராட்டுவீர்கள்” என ஃபேமிலி மேன் 2 தொடர், இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: