ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் சங்க கட்டட விவகாரம் - வங்கி கடன் பெற நிர்வாகிகள் முடிவு

நடிகர் சங்க கட்டட விவகாரம் - வங்கி கடன் பெற நிர்வாகிகள் முடிவு

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

வங்கி கடன் பெற்று நடிகர் சங்க கட்டடத்தை முடிக்க நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான நிர்வாகத்தினர் முடிவு. செயற்குழு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

  • News18
  • 2 minute read
  • Last Updated :

நடிகர் சங்க கட்டட பணிகளை வங்கி கடன் பெற்று முடிக்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்த கட்டடம் கட்டும் பணி நாசர் தலைமையிலான நிர்வாகத்தினர் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கினார்.

அதற்காக சென்னை மலேசியா உள்ளிட்ட இடங்களில் நட்சத்திர நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் மூலம் திரட்டப்பட்ட நிதியை கொண்டு தி.நகரில் உள்ள நடிகர் சங்க இடத்தில் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

வேகமாக நடைபெற்று வந்த பணிகள் நடிகர் சங்கத்தின் தேர்தல் சமயத்தில் நிறுத்தப்பட்டது. மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் மீதமிருக்கும் தொகையை திரட்ட முடியாமல் போனது.  அத்துடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்க இரண்டரை வருடங்களானது.

இதன் காரணமாக மூன்று ஆண்டுகளாக 70 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் நடிகர் சங்க கட்டட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நாசர் தலைமையிலான அணியினர் வெற்றியடைந்து மீண்டும் நிர்வாகப் பொறுப்பிற்கு வந்தனர்.  இதன் பின் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நடிகர் சங்கத்தின் கட்டட பணிகளை தொடங்க திட்டமிட்டனர்.

அதன்படி வங்கி கடன் பெற்று கட்டட பணிகளை முடிக்க செயற்குழுவும், பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் சங்க நிர்வாகிகள் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக மூன்று வங்கிகளில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வங்கி கடன் கிடைத்தவுடன் பாதியில் நிறுத்தப்பட்ட இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டட பணிகளை தொடங்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

Also read... நடிகை சாய் பல்லவி மீது ஹைதராபாத்தில் புகார்

புதிதாக கட்டப்படும் அந்த கட்டடத்தில் 2 திரையரங்குகள்,  திருமண மண்டபம் மற்றும் நடிகர் சங்க அலுவலகம்,  நடிகர்களுக்கான பயிற்சி அலுவலகங்கள் அதில் கட்டப்படுகின்றன. அதன் மூலம் நடிகர் சங்கத்திற்கு மாதம் பல லட்சம் ரூயாய் வருமானம் கிடைக்கும் என்று நாசர், விஷால், கர்த்தி தலைமையிலான அணியினர் கூறியுள்ளனர்.

அந்த தொகையை கொண்டு நலிவடைந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மாதம் மாதம் நிதி உதவி செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Nadigar Sangam