ஆஸ்கர் விருதை வென்று சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது தி எலிபன்ட் விஸ்பரர் ஆவண குறும்படம். முதுமலை வனப்பகுதியில் உள்ள தெப்பக்காடு என்ற கிராமத்தில் படமாக்க பட்டது இந்த எலிபன்ட் விஸ்பரர் ஆவணப்படம்.
யானைகளுக்காக வைக்கப்படும் மின்வேலியில் சிக்கிக் கொள்ளும் குட்டி யானையான ரகு மற்றும் அம்மு ஆகிய இரண்டு குட்டி யானைகளை பொம்மன் மற்றும் பெள்ளி என்ற மலைவாழ் தம்பதி வளர்த்து வேறு பாகனிடம் கொடுக்கும் வரை அந்த யானை குட்டிகளுக்கும் பொம்மன் பெல்லி தம்பதிக்கும் இடையே உள்ள பாச போராட்டங்களை விளக்கும் வண்ணம் இந்த ஆவணப்படம் உருவாகி உள்ளது.
இது குறித்து பேசிய பெள்ளி, ஆஸ்கர் விருது கிடைத்ததில் வனத்துறை, பழங்குடியின மக்களுக்கு பெருமை சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elephant, Oscar Awards