முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழ்நாட்டில் உருவான ‘The Elephant Whisperers’ ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது..!

தமிழ்நாட்டில் உருவான ‘The Elephant Whisperers’ ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது..!

சிறந்த ஆவண குறும்படத்திற்காக ஆஸ்கர் விருது அறிவிப்பு

சிறந்த ஆவண குறும்படத்திற்காக ஆஸ்கர் விருது அறிவிப்பு

‘The Elephant Whisperers win Oscar | முதுமலையில் உள்ள ‘ரகு’ என்ற யானையை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaAmericaAmericaAmericaAmerica

95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில், இந்திய நடிகை தீபிகா படுகோன் விருது வழங்குபவர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

‘The Elephant Whisperers’ சிறந்த ஆவண குறும்படமாக ஆஸ்கரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டின்  முதுமலையில் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளை பராமரித்த பழங்குடியின தம்பதி பொம்மன் - பெல்லி தம்பதியையும் அவர்கள் வளர்த்த ரகு என்ற யானையையும் மையமாக வைத்து வன புகைப்பட கலைஞர் கார்த்திகியால் உருவாக்கப்பட்ட ஆவணப்படமாகும்.

சிறந்த அனிமேஷன் திரைப்படமாக ‘கில்லர்மோ டெல் டோரோ’ஸ் பினோச்சியோ’ படம் தேர்வாகியுள்ளது.  சிறந்த துணை நடிகராக 'கே ஹுய் குவான்' தேர்வாகியுள்ளார். “Everything Everywhere All at Once” என்ற திறைப்படத்திற்காக இந்த விருதினை அவர் வாங்கியுள்ளார்.

சிறந்த துணை நடிகையாக 'ஜேமி லீ கர்டிஸ்' தேர்வாகியுள்ளார். “Everything Everywhere All at Once” படத்திற்காக இந்த விருதினை அவர் பெற்றுள்ளார்.

First published:

Tags: Oscar Awards