உடன்பிறப்பே என்ன மாதிரியான கதை? - இயக்குனர் விளக்கம்!

உடன்பிறப்பே

அண்ணன் - தங்கை பாசத்துக்கு இன்றும் எடுத்துக்காட்டாக இருப்பது பாசமலர். அதையடுத்து கிழக்குச் சீமையிலே வந்தது. இப்போது நவீன பாசமலராக உடன்பிறப்பே தயாராகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜோதிகாவின் 50 வது படமாக உடன்பிறப்பே தயாராகிறது. திருமணத்துக்குப் பின் நடிக்காமலிருந்த ஜோதிகா, நல்ல கதைகளாக அலசி ஆராய்ந்தே நடிக்கிறார். அப்படிப்பட்டவர் தனது 50 வது படமாக உடன்பிறப்பேயை தேர்வு செய்துள்ளார் என்றால் படத்தின் கதை அவருக்கு பிடித்துள்ளது என்று அர்த்தம். முன்னாள் பத்திரிகையாளர் சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

தஞ்சை விவசாயிகள் பிரச்சனையை மையப்படுத்தி வெளியான கத்துக்குட்டி சரவணனின் முதல்படம். நல்ல விமர்சனங்கள் கிடைத்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை. அடுத்ததாக உடன்பிறப்பே கதையை தயார் செய்து அதனை படமாக்க தயாரிப்பாளர் தேடி பல வருடங்கள் அலைந்துள்ளார். கடைசியில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்டில் கதை கேட்டிருக்கிறார்கள். கதையை கேட்ட அவர்கள். "இது நவீன பாசமலர்" என்று பாராட்டினார்கள் என்கிறார் சரவணன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கதையை கேட்ட ஜோதிகாவுக்கு மிகவும் பிடித்துப்போய், உடனே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சரவணனை ஜோதிகாவுக்கு பத்திரிகையாளராக முன்பே தெரியும் என்பதால், அவர் மீதுள்ள நம்பிக்கையில் உடன்பிறப்பே படத்தை தனது 50 வது படமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Also read... உடல் எடையை குறைத்த சீனியர் நடிகர்கள் குஷ்பு, பிரபு...!

ஜோதிகா பற்றி கூறுகையில், "அவர் முழுக்க முழுக்க தஞ்சாவூர் பெண்ணாக மாறி நடித்துள்ளார். பாசமும், கமீபரமும்மிக்க பெண்மணியாக படம் முழுக்க வருவார்" என்றார் சரவணன். ஜோதிகாவின் அண்ணனாக சசிகுமார். யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத நல்ல உள்ளம் கொண்டவராக இதில் வருகிறார். ஜோதிகாவின் கணவராக சத்திரகனி

அண்ணன் - தங்கை பாசத்துக்கு இன்றும் எடுத்துக்காட்டாக இருப்பது பாசமலர். அதையடுத்து கிழக்குச் சீமையிலே வந்தது. இப்போது நவீன பாசமலராக உடன்பிறப்பே தயாராகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: