ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கர்ணன் படத்தை மிஞ்சிய தனுஷின் நானே வருவேன் டிஜிட்டல் விற்பனை

கர்ணன் படத்தை மிஞ்சிய தனுஷின் நானே வருவேன் டிஜிட்டல் விற்பனை

நானே வருவேன் தனுஷ்

நானே வருவேன் தனுஷ்

இதற்கு முன் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தாணு தயாரித்த கர்ணன் திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமை 9 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை 24 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் திரைப்படம் உருவாகி வருகிறது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தயாரிப்பாளர் தாணு படத்திற்கான வியாபார பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார் என சினிமா துறையில் கூறுகின்றனர்.

அதில் முதல்கட்டமாக திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார் என கூறப்படுகிறது.

Also read... 'நாயகன் மீண்டும் வர்றார்!' - கமல் ஹாசனின் நடிப்பில் நாம் கொண்டாடிய ஆக்ஷன் படங்கள்!

அதிலும் 24 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடந்து இருப்பதாக சினிமா துறையினர் தெரிவிக்கின்றனர். இதற்கு முன் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தாணு தயாரித்த கர்ணன் திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமை 9 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தது. இந்த நிலையில் நானே வருவேன் படத்தின் ஓ.டி.டி உரிமை இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor dhanush