ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஷூட்டிங்கே தொடங்கல.. அதுக்குள்ள இத்தனை கோடி வியாபாரமா? தளபதி67 குறித்து சூப்பர் அப்டேட்

ஷூட்டிங்கே தொடங்கல.. அதுக்குள்ள இத்தனை கோடி வியாபாரமா? தளபதி67 குறித்து சூப்பர் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி 67ல் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைவதால், அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் பல கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் திட்டமிட்டப்படி டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தின் நடிகர்களும் இறுதி செய்யப்பட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் இந்த படத்தில் த்ரிஷா, சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அதேபோல் கவுதம் மேனன், பிரித்விராஜ் சுகுமாரன், மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also read... படம் ஜெயிக்க கண்டன்ட் போதும்.. லவ் டுடே தான் சாட்சி.. புகழ்ந்து தள்ளியே விஷ்ணு!

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி 67ல் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைவதால், அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள 'தளபதி 67' படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளதோடு, பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு பட தமிழ்நாடு தியேட்டர் உரிமையையும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் கைப்பற்றியுள்ளது. இதனிடையே, தளபதி 67 லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பின்னணியில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்காத நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ. 160 கோடிக்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை ரூ. 80 கோடிக்கு சன் டிவியும் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay, Lokesh Kanagaraj