Nitish Veera: தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் உறைய வைத்த நிதீஷ் வீரா மறைவு

நிதீஷ் வீரா

48 வயதாகும் நித்திஷ் ஏறத்தாழ இருபது ஆண்டு காலமாக சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை தேடி உழைத்துக் கொண்டிருந்தார்.

  • Share this:
    தமிழ் சினிமாவில் மற்றொரு துணை நடிகரான நிதீஷ் வீரா மறைவு திரைத்துறையினர் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

    கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் எடுத்துள்ள நிலையில் தமிழ் சினிமா நடிகர்களின் அடுத்தடுத்த மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் உலுக்கி எடுத்துள்ளது. நடிகர் விஜய்யுடன் கில்லி திரைப்படத்தில் நடித்த மாறன், 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணை நடிகராக நடித்த நெல்லை சிவா, உள்ளிட்ட நடிகர்கள் வரிசையில் தற்போது அசுரன் திரை படத்தில் நடித்து புகழ் பெற்ற நிதிஷ் வீராவின் மரணமும் தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திரங்கள் பலரையும் உறைய வைத்துள்ளது.

    கூத்துப்பட்டறையில் நடிகராக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கிய நிதிஷ் வீரா, பிரபல பத்திரிக்கையாளர் ஞானி நாடகக்குழுவில் முக்கிய நடிகராக வலம் வந்து பின்னர் திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். புதுப்பேட்டை திரைப்படத்தில் மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நித்திஷ் வீரா, அந்த கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சிறிய அடையாளத்தை பெற்றார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நித்திஷ் வீரா, செல்வராகவன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாணி காகிதம் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கும் அளவு தற்பொழுது உயர்ந்திருந்தார்.

    இதன் காரணமாக இயக்குனர் செல்வராகவன், மணி உன்னை பிரிந்து வாடுகிறோம் என தனது உருக்கத்தை வெளியிட்டிருந்தார். இதேபோல வெண்ணிலா கபடி குழு, மாவீரன் கிட்டு ஆகிய திரைப்படங்களில் நித்திஷ் வீராவுடன் இணைந்து நடித்த நடிகர் விஷ்ணு விஷால், நிதிஷ் மரணத்தை மனம் மறுப்பதாக தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 48 வயதாகும் நித்திஷ் ஏறத்தாழ இருபது ஆண்டு காலமாக சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை தேடி உழைத்துக் கொண்டிருந்தார். அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில், முக்கிய வில்லன்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அதன் மூலம் புகழ்பெற்ற அவர், அடுத்தடுத்து நான்கு முக்கிய படங்களில் நடித்து ரிலீசுக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில், கொரனாவின் கோரப்பசிக்கு பலியாகியுள்ளார். திருமணமாகி ஏழு மற்றும் எட்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் நிதீஷுக்கு உள்ளனர் என்பது தமிழ் சினிமா உலகை மேலும் உறைய வைக்கும் ஒரு துயரச் செய்தி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: