பறவைகளின் மீது பாசம்.. பழகுவதற்கு இனிமையானவர் - நடிகை சித்ரா குறித்து நண்பர்கள்

நடிகை சித்ரா

சினிமாவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தாலும் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கியதாக கூறுகின்றனர்.

 • Share this:
  நடிகை  சித்ராவின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  அவள் அப்படித்தான்’ படத்தில்  கே.பாலசந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. 80களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர். தமிழ், மலையாள மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் உட்பட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் சித்ரா. சேரன் பாண்டியன் படத்தில் சரத்குமாரின் தங்கையாக வந்து ரசிகர்களின் மனதை வென்றார். சினிமாவை தொடர்ந்து சின்னத்திரையிலும் ஒரு ரவுண்ட் வந்தார். விளம்பரம் படங்களிலும் நடித்துள்ளார்.

  சினிமாவை தவிர்த்து தனியார் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்த சித்ரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சித்ரா பழகுவதற்கு இனிமையானவர் என அவரது நட்பு வட்டாரங்கள் கூறுகின்றனர்.

  சினிமாவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தாலும் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கியதாக கூறுகின்றனர்.நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற மகள் உள்ளார். அவர் இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். இவர் கடைசியாக "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா" என்ற படத்தில்  நடித்தார். இந்தப்படம் 2020-ல் வெளியானது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சித்ராவின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். சித்ரா தான் அவரை கவனித்து வந்துள்ளார். சித்ராவுக்கு பறவைகள் என்றால் கொள்ளை பிரியமாம். அவரது வீட்டு மொட்டைமாடியில் தினமும் பறவைகளுக்கு உணவு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். காகம், கிளி, புறா என இவரது வீட்டில் பறவைகள் கூட்டத்தை பார்க்கலாம். கோடை காலங்களில் பறவைகள் தாகம் தனிப்பதற்காக மொட்டை மாடியில் தண்ணீர் உணவு ஆகியவற்றை வைத்து விடுவார். பறவைகளுக்கு உணவு வைப்பதற்காகவே வெளியூர் பயணங்களை தவிர்த்து வந்துள்ளார்.

  கடந்த மே21-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். சமீபத்தில் பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில்,  பிறந்த நாளுக்கு நிறைய பேர் வாழ்த்துனாங்க 21-ம் நூற்றாண்டு, வருஷமும் 21, நாளும் மே 21-ன்னு சொல்லி சிலர் வாழ்த்தினப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது’’  எனக் கூறி தனது மகிழ்ச்சியை வெளியிப்படுத்தியுள்ளார். அதே 21-ல் அவர் மறைந்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: