முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்கு செல்லும் படக்குழுவினர்

பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்கு செல்லும் படக்குழுவினர்

 மணிரத்னம், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,  த்ரிஷா

மணிரத்னம், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,  த்ரிஷா

பொன்னியின் செல்வன் பட குழு புரமோஷன் நிகச்சிக்காக சென்னையை தொடர்ந்து திருவனந்தபுரத்திற்கு பறந்தனர். அதைத்தொடர்ந்து மற்ற மாநிலத்திற்கு செல்கின்றனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர்  வெளி மாநிலங்களுக்கு சென்றனர். 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.

இதைத் தொடர்ந்து படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் படக்குழுவினர் இறங்கி இருக்கின்றனர். அதில் முதல் கட்டமாக சென்னையில் சனிக்கிழமை முதல் புரோமோஷனல் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தற்போது வெளி மாநிலங்களுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அதில் திருவனந்தபுரம், பெங்களூர், ஐத்தராபாத், டெல்லி, மும்பை ஆகிய  இடங்களுக்கு அடுத்தடுத்து அவர்கள் செல்கின்றனர்.

அதில் மணிரத்னம், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,  த்ரிஷா உள்ளிட்ட  பொன்னியின் செல்வன் பட குழுவினர் ஒன்றாகச் செல்லும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

Also read... பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்கள் தேர்வு எப்படி இருந்தது - மணிரத்னம் விளக்கம்!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நடிகர் விக்ரம் கலந்துகொள்ளவில்லை. ஆனால் வெளி மாநிலங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளுக்கு பயணிக்கவிருந்த திட்டம் நேரம் இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Jayam Ravi, Actor Karthi, Actor Vikram, Actress Trisha, Mani rathnam, Ponniyin selvan